பாஜக வாகனத்தில் “தொங்கிய” பொன்னையன்.. அதிமுக “சீனியருக்கு” இந்த நிலையா? அண்ணாமலை பிரச்சாரத்தில் பரபர
ஈரோட்டில் அண்ணாமலை வாக்கு சேகரித்தபோது, அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் பாஜக பிரச்சார வாகனத்தில் ஓரமாக கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கியடி நின்றார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான பொன்னையன் பாரதிய ஜனதா கட்சி பிரச்சார வாகனத்தில் ஓரமாக கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கியடி நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காங்கிரஸ் கட்சிக்கே திமுக கூட்டணி சார்பில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியது.

அதிமுக தாமதம்
நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நிலவிய உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதில் பாஜக போட்டியிட விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின.

எடப்பாடி தரப்பு வேட்பாளர்
அண்ணாமலையை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவித்தார்.

பாஜக கூட்டணி
அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் என்று பேச்சு அடிபட்டது. அதேநேரம் தேர்தல் பணிமனையில் கூட்டணி பெயர் மாற்றப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதாகவும் பேசப்பட்டது.

அண்ணாமலை ஆதரவு
இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். அதில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அவர் குறிப்பிட்டு இருந்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றனர்..

ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்
இந்த நிலையில்தான் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதுடன் இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதே நேரம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தென்னரசுவை வேட்பாளராக ஏற்பதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் வழங்கிய கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்று கையெழுத்திட அனுமதித்தது.

பாஜக ஆதரவு
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு அளிப்பதாக அறிவித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில் அவருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இறுதி வேட்பாளர் பட்டியலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதிமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முந்தினம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அண்ணாமலை பிரச்சாரம்
பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார வாகனத்தில் அண்ணாமலை பேசிக்கொண்டு இருந்தபோது அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் அருகருகே நின்றுகொண்டு இருந்தனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான பொன்னையனும் அந்த வாகனத்தில் நின்றார்.

காரில் தொங்கிய பொன்னயன்
ஆனால், பொன்னையன் பாஜக பிரச்சார வாகனத்தில் நிற்க இடம் இன்றி கார் கம்பியை பிடித்துக்கொண்டு லேசாக தொங்கியபடி கார் ஓரத்தில் நின்று கொண்டு இருந்தார். கட்சியின் மூத்த தலைவராக இருந்த பொன்னையனை இவ்வாறு கார் ஓரத்தில் தொங்கும் படி நிறுத்தியதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications