"அம்மாவையே" மறந்துட்டாங்களே.. தென்னரசு எங்க போனாரு.. ரத்தம் கொதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்.. ஏன்?
இரட்டை இலை சின்னமும் எடப்பாடியின் விருப்பம் போலவே தென்னரசுவிற்கு கிடைத்துவிட்டது. ஓ பன்னீர்செல்வம் தரப்பின் மிகப்பெரிய தோல்வியாக இது பார்க்கப்படுகிறது
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் கே. எஸ் தென்னரசு மீது அதிமுக நிர்வாகிகள் சிலர் முக்கியமான புகார் ஒன்றை வைத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் அதிமுக பொது வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுக சார்பாக அங்கே தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொதுக்குழு
இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போட்டது. இதையடுத்து கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை பொது வேட்பாளரை தேர்வு செய்ய முடிந்தது.

எடப்பாடி
அதோடு இரட்டை இலை சின்னமும் எடப்பாடியின் விருப்பம் போலவே தென்னரசுவிற்கு கிடைத்துவிட்டது. ஓ பன்னீர்செல்வம் தரப்பின் மிகப்பெரிய தோல்வியாக இது பார்க்கப்படுகிறது. ஈரோடு இடைத்தேர்தல் வருகிறது.. இதுதான் அதிமுகவில் நாம் ரீ என்ட்ரி கொடுக்கும் நேரம். நம்மை ஒதுக்கியவர்கள் நம்மை தேடி வரும் நேரம். சின்னத்தை முடக்குவோம். அதன் மூலம் நம் பவரை காட்டுவோம் என்று இருந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு இந்த முடிவு பெரிய மனஉளைச்சலை கொடுத்து இருக்கிறதாம். இரட்டை இலை சின்னத்தின் கீழ் தற்போது தென்னரசு பிரச்சாரம் செய்து வருகிறார்.

என்ன செய்தார்?
இந்த நிலையில்தான் அதிமுக சார்பாக போட்டியிடும் கே. எஸ் தென்னரசு மீது அதிமுக நிர்வாகிகள் சிலர் முக்கியமான புகார் ஒன்றை வைத்துள்ளனர். இவர் தற்போது ஈரோடு கிழக்கில் பிஸியாக பிரச்சாரம் செய்து வருகிறார். கே.எஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தும் கூட ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் பணிகளை கவனிக்க முடியாமல் திணறுகிறார்கள் அதிமுகவினர். தேர்தல் பணிகளை கவனிக்க, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட மிகப்பெரிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் எடப்பாடி. . செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, டுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜின் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது.

மறந்துவிட்டனர்
கே. எஸ் தென்னரசுவிற்காக இவ்வளவு பணிகள் செய்தும் கூட இன்னும் தென்னரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ஆசி பெற செல்லவில்லை. தனது வேட்புமனுவை முன்பு அவர் சமாதியில் வைத்து வணங்கவும் இல்லை. பிரச்சாரத்திற்கு முன்பு கூட ஒரு மரியாதைக்காக தென்னரசு அங்கே சென்று மரியாதை செய்யவில்லை. அதிமுகவினர் பலர் இடையே இந்த விவகாரம் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அம்மாவை மறந்துவிட்டனர் இவர்கள்.. உட்கட்சி மோதலில்.. கட்சியின் உருவமாக இருந்த தலைவரை இவர்கள் மறந்துவிட்டனர், தென்னரசு மரியாதைக்காகவாவது இங்கே வந்திருக்க வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கொதிப்புடன் குறிப்பிட்டு உள்ளனர்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications