ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. விரலில் வைக்கும் மை அழியவில்லை.. அதிமுக வேட்பாளர் தென்னரசு!
வாக்காளர் விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை என்று தென்னரசு கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்தவர்களின் விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை என்று அதிமுக வேட்பாளர் தென்னரசு தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும் நாகரீக அரசியலை தான் முன்னெடுப்போம் என்று கூறிய அவர், இடைத்தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதன் பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் மேனகா உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களிக்க தொடங்கினர். மாலை 6 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம். மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் காத்திருந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிமுக குற்றச்சாட்டு
பொதுமக்கள் வாக்கு செலுத்த வசதியாக 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் சில வாக்குச்சாவடிகள் அருகே திமுக - அதிமுக இடையே சிறு மோதல் ஏற்பட்டது. அதேபோல் இரு வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்தியவர்களுக்கு விரலில் வைக்கப்படும் மை அழிவதாகவும் அதிமுக தரப்பில் தேர்தல் அலுவலரிடம் புகாரளிக்கப்பட்டது.

வாக்கு மை அழியவில்லை
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, ஈரோடு கருங்கல்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தென்னரசு கூறுகையில், காலையில் இருந்தே மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். இதில் அதிமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை. ஈரோட்டில் நாகரீகமான அரசியல் தான் செய்யப்படும்.

தேர்தல் ஏற்பாடுகள்
திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும், அனாவசியமாக கடுஞ்சொல் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். எப்போதும் நாகரீகமாக நடப்போம். சிறுசிறு சச்சரவுகள் தொண்டர்களிடையே வரும். தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களை வேகமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications