தூள்! ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கு ஜாக்பாட்.. எடப்பாடிக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.. எல்லாம் மாறிடுச்சே
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு: அதிமுக பொதுக்குழு வழக்கில் வந்து இருக்கும் தீர்ப்பு ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து உள்ளது. இதுவரை சுணக்கமாக இருந்த தேர்தல் களம் தற்போது அப்படியே மாறி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் போட்டியிடுகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது தேர்தல் களமே வேறு மாதிரி இருந்தது.
அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருந்தது. திமுக - காங்கிரஸ் கூட்டணி தரப்பு வேகமாக களத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தது.

அதிமுக
ஆனால் எதிர் தரப்பில் களம் வேறு மாதிரி இருந்தது. பாஜக போட்டியிடுமா.. போட்டியிடாதா என்ற குழப்பம் இருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை நிறுத்த முயன்று கொண்டு இருந்தது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் நாங்களும் வேட்பாளரை நிறுத்துவோம். இல்லையென்றால் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என்று கூறியது. இன்னொரு பக்கம் அமமுக தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அப்படியே பிரியும் நிலை ஏற்பட்டது. மொத்தமாக எதிர்க்கட்சிகள் பல தரப்பாக பிரிந்து கிடந்தன. இந்த நிலையில்தான், தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களத்தில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கி உள்ளது.

தீர்ப்பு
இந்த நிலையில்தான் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

மாற்றம்
அதிமுக பொதுக்குழு வழக்கில் வந்து இருக்கும் தீர்ப்பு ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து உள்ளது. அதிமுக இதனால் வலிமை அடைந்து உள்ளது. ஒரு தலைமை கீழ் அதிமுக வந்துள்ளது. ஓபிஎஸ் இல்லாததால் பிரிய வேண்டிய வாக்குகள் ஒன்று சேர்ந்து உள்ளன. ஏற்கனவே து ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்தது. தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது.

பாஜக
அதிமுக பொதுக்குழு வழக்கில் வந்து இருக்கும் தீர்ப்பு ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து உள்ளது. அதிமுக இதனால் வலிமை அடைந்து உள்ளது. ஒரு தலைமை கீழ் அதிமுக வந்துள்ளது. ஓபிஎஸ் இல்லாததால் பிரிய வேண்டிய வாக்குகள் ஒன்று சேர்ந்து உள்ளன. ஏற்கனவே ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்தது. தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது.












Click it and Unblock the Notifications