இதுமட்டும் நடந்தால்.. ஈரோடு கிழக்கில் அதிமுக கண்டிப்பாக ஜெயிக்கும்.. எக்ஸ்பர்ட் சொன்ன பரபர கணிப்பு!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தேர்தல் தேர்தலாக நடந்தால் அதிமுக வெல்லும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தலில் ஒருவழியாக ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
பாஜகவும் தென்னரசுவை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், பாஜக வளர்ந்தது வளர்ந்தது என்று கூறியவர்கள், ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடவில்லை,. இது அவர்களின் உண்மையான பலத்தை காட்டுகிறது. பாஜக வளரவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் சொல்லிய அளவிற்கு பாஜக வளரவில்லை என்றுதான் கூறுகிறேன். அவர்கள் சொல்லும் அளவிற்கு பாஜகவில் பெரிய வளர்ச்சி எல்லாம் ஏற்படவில்லை. சில இடங்களில் பாஜக ஆங்காங்கே வளர்ந்து இருக்கிறது. அவ்வளவுதான். கொங்கு மண்டலத்தில் சில இடங்களில் கொஞ்சமாக வளர்ந்து உள்ளது. அவ்வளவுதான்.

வளர்ச்சி
அதேபோல் இந்த வளர்ச்சியால் எந்த பயனும் இல்லை. இதனால் அவர்கள் தேர்தலில் வெற்றி எல்லாம் பெற முடியாது. ஒரு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் ஒரு தொகுதியில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற வேண்டும். அதை பாஜக பெறுவதற்கான சூழ்நிலையே தற்போது இல்லை. அதனால் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. இன்னொரு பக்கம் தேர்தல் நேர்மையாக நடந்தால் அதிமுக வெற்றிபெற கூட வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தல் தேர்தலாக நடந்தால், இரட்டை இலை இருப்பதால் அதிமுக ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஈரோடு
ஈரோட்டில் தேர்தல் தேர்தலாக நடந்தால், ஓபிஎஸ், எடப்பாடி ஒன்றாக இருந்தால், அதிமுகவிடம் இரட்டை இலை இருந்தது என்றால்.. அதிமுக வெல்ல சான்ஸ் இருக்கும். தேர்தல் தேர்தலாக நடந்தால் இதற்கு சான்ஸ் இருக்கும். 20 வருடங்களுக்கு முன்பு வரை.. 2003க்கு முன்பு வரை எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் வெல்லும் நடைமுறை இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. டிடிவி தினகரன் ஆர்கே நகரில் வென்றது தனிக்கதை. எனவே ஆளும் கட்சி ஜெயிப்பதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. அப்படி இருக்க.. ஈரோடு கிழக்கில் தேர்தல் தேர்தலாக நடந்தால், அதிமுகவில் இரண்டு தரப்பும் ஒன்றாக இருந்தால், அதிமுகவின் பழைய கூட்டணி அதே மாதிரி இருந்தால், இரட்டை இலை ஜெயிக்கும்.

இரட்டை இலை
அப்படி நடந்தால் இரட்டை இலை ஜெயிக்கும். அதை தடுக்க முடியாது. ஆனால் தேர்தல் தேர்தலாக நடக்காது. இரண்டு தரப்பும் அங்கே பணம் கொடுக்கும். அதே சமயம் ஆட்சி அதிகாரம் திமுகவிடம் இருப்பதால் இளங்கோவன் வெற்றிபெறுவதை தடுக்க முடியாது. ஏதாவது அதிசயம் நடந்தால் கூட அதை தடுக்க முடியாது. இப்போது இரட்டை இலை முடங்கவில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் ரிட்டர்னிங் அலுவலர் நினைத்தால் இரட்டை இலையை முடக்க முடியும். இதில் உச்ச நீதிமன்ற வழக்கு எதுவும் செய்ய முடியாது. அதனால் இரட்டை இலை முடங்காமல் இருந்தால் அதிமுக வெல்லும் வாய்ப்பு இருக்கும். திமுக கூட்டணிக்கு தேர்தல் தேர்தலாக நடந்தால் அதிமுக கடும் பைட் கொடுக்கும், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications