"இடைக்கால பொதுச்செயலாளர்".. எடப்பாடியை வெளிப்படையாக அழைத்த அண்ணாமலை.. ஆஹா.. ஓபிஎஸ் வெறும் "அண்ணனா"?

எடப்பாடியின் ஒற்றை தலைமை பாஜக அங்கீகரிக்கும் விதமாக இப்படி குறிப்பிட்டு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து இருக்கும் விதம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் ஒரு வழியாக அதிமுக தரப்பில் யார் போட்டியிடுவார் என்பது உறுதியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்குப்படி தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

பாஜக நிலைப்பாடு

பாஜக நிலைப்பாடு

ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது. ஈரோடு-கிழக்கில் நம் தோழமை கட்சியான அதிமுகவின் பெரும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து இருக்கும் விதம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை தனது அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக, இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாரதிய ஜனதா கட்சி, தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

அறிக்கை

அறிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வமிற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகக் களம் காணும் தகே.எஸ்.தென்னரசுவிற்கு நல்வாழ்த்துக்களையும், பாஜகவின் நல்லாதரவையும், தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை கூறி உள்ளார். இந்த அறிக்கையில் அவர் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகள்தான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

விவாதம்

விவாதம்

இதில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி என்று அண்ணாமலை கூறி உள்ளார். தேர்தல் ஆணையத்தில் இன்னும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி என்றுதான் உள்ளது. அதேபோல் பொதுக்குழு வழக்கிலும் இன்னும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. இப்போது அதிமுக வேட்பாளர் வேட்புமனுவில் கூட எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடவில்லை. அப்படி இருக்கும் போது அண்ணாமலை தற்போது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அங்கீகரித்து உள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இன்னொரு பக்கம் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் என்று வெறுமனே ஓ பன்னீர்செல்வமாய் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு முன் மூத்த தலைவர் என்றோ, ஒருங்கிணைப்பாளர் என்றோ, முன்னாள் முதல்வர் என்றோ, எதிர்க்கட்சி துணை தலைவர் என்றோ குறிப்பிடவில்லை. இதனால் எங்கே எடப்பாடியை பாஜக இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டுவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடியின் ஒற்றை தலைமை பாஜக அங்கீகரிக்கும் விதமாக இப்படி குறிப்பிட்டு உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+