"ஆபரேஷன் 111".. எடப்பாடி இறக்கிய மெகா டீம்.. நடப்பது நடக்கட்டும்.. பறந்து போன ஆர்டர்.. ஆஹா செம மோதல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சின்னம் முடங்குகிறதோ இல்லையோ நாம் தேர்தலில் போட்டியிட வேண்டும். தேர்தலில் கண்டிப்பாக நமது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்கும் போட்டிக்கு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது.
அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணையாளர்.

உறுதியான நிலைப்பாடு
எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். ஆனால் இதை பற்றி எடப்பாடி பழனிசாமி பெரிதாக கவலைப்படவில்லை. சின்னம் முடங்குகிறதோ இல்லையோ நாம் தேர்தலில் போட்டியிட வேண்டும். தேர்தலில் கண்டிப்பாக நமது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.

ஓ பன்னீர்செல்வம்
தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ பன்னீர்செல்வம் சொன்னதை தவிர அதன்பின் வேட்பாளர் தேர்விற்கான பெரிய நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அதேபோல் அவர் சார்பில் போட்டியிட யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இங்கே குறைந்தது 10 - 20 கோடி ரூபாய் செலவு செய்யும் அளவிற்கு தகுதியான நிர்வாகிகள் மட்டுமே போட்டியிட முடியும் என்று பேச்சுக்கள் உள்ளன. அதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை எதிர்த்து போட்டியிட ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் பலர் தீவிரமாக யோசிக்கிறார்களாம்.

எடப்பாடி
அதோடு பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்று தெரியவில்லை. பாஜக வேட்பாளரை நிறுத்த போகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. இதனால் பாஜகவின் முடிவிற்காகவும் ஓபிஎஸ் தரப்பு காத்து இருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு இதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக மிக தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த தேர்தலுக்காக தீவிரமான பணிகளை அவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

குழு
இதையடுத்தே 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜி அமைச்சர்களின் படை இங்கே களமிறக்கப்பட்டு உள்ளது.

மாஜி அமைச்சர்கள் படை
ஆளும் தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்க வைக்கப்பட்டு உள்ளார். இடைத்தேர்தலில் காங்கிரசை மட்டுமே நம்பி இருக்க கூடாது என்பதற்காக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக தீவிரமாக பணியாற்ற தொடங்கி உள்ளது. இடைத்தேர்தல்தான் என்றாலும் கூட பெரிய அணியையே இறக்கி இங்கே தேர்தல் பணிகளை திமுக செய்ய தொடங்கி உள்ளது. இதற்காக அமைச்சர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவையும் திமுக நியமனம் செய்துள்ளது. கே.என். நேரு தலைமையில்தான் இங்கே தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், அர. சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி. செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு. நாசர், கயல்விழி செல்வராஜ், ஆகியோரும் இங்கே தேர்தல் பணிகளை செய்ய தொடங்கி உள்ளனர். மொத்தமாக பெரிய அமைச்சர்கள் அணியையே இங்கே திமுக களமிறக்க காரணம் இந்த தேர்தலை அந்த அளவிற்கு திமுக சீரியஸாக கருதுகிறது என்பதுதான்.

அதிமுக
இந்த நிலையில்தான் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவ்வளவு பெரிய டீமை எடப்பாடி களமிறக்கி உள்ளது. மோதி பார்த்திடலாம் என்ற முடிவோடு எடப்பாடி இறங்கி உள்ளார். இது தொடர்பாக நிர்வாகிகளிடம் மீட்டிங்கில் பேசிய எடப்பாடி.. வார்டு வாரியாக உங்களுக்கு பிரித்து கொடுத்து இருக்கிறோம். 31 வார்டு இருக்கிறது. இந்த வார்டுகளில் பூத் கமிட்டி இல்லை என்றால் உடனே உருவாக்குங்கள். வீடு வீடாக பிரச்சாரம் செய்யுங்கள். எல்லோரிடமும் வாக்குகளை கேளுங்கள். ஆட்சியின் குறைகளை சொல்லுங்கள். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பதை சொல்லுங்கள். மின் கட்டணம், பால் கட்டணம் உயர்வு பற்றி சொல்லுங்கள். நமக்கு 40+ சதவிகித வாக்குகள் தேவை.கொங்கு நம்முடைய கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். ஜாதி அமைப்புகள், தொழிலாளர் சங்க தலைவர்களிடம் ஆதரவு கேளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி இந்த மீட்டிங்கில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications