ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் vs ஈஸ்வரமூர்த்தி... மொடக்குறிச்சி சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு கல்தா..!
ஈரோடு: சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடே முடிவடையாத சூழலில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவதற்காக காங்கிரசும், அதிமுகவும் வரிந்துகட்டிக் கொண்டு களப்பணிகளை தொடங்கிவிட்டன.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மொடக்குறிச்சியில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
இதனிடையே அவரை எதிர்த்து அதிமுக சார்பில் எழுமாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி போட்டியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

மொடக்குறிச்சி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா சமீபகாலங்களாக ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் களப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அந்த வகையில் மொடக்குறிச்சியில் அவரே போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சிட்டிங் எம்.எல்.ஏ.
இதனிடையே அதிமுகவில் இப்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ள வி.பி.சிவசுப்பிரமணியத்திற்கு மீண்டு வாய்ப்பு கொடுக்க இ.பி.எஸ்.தரப்பு தயங்குவதாக கூறப்படுகிறது. காரணம் கடந்த 2017-ம் ஆண்டு அதிமுகவில் உருவான சர்ச்சையின் போது டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசிய எம்.எல்.ஏ.க்களில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணியமும் ஒருவர். இதனால் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.

ஊராட்சி தலைவர்
இந்த தேர்தலில் ஜெயலலிதா பாணியில் லைம் லைட்டில் இடம்பெறாத நபர்களை வேட்பாளர்களாக களமிறக்க முடிவுசெய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் எழுமாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரமூர்த்தியை மொடக்குறிச்சியில் நிறுத்தி காங்கிரஸை எளிமையாக வென்றுவிடலாம் என அவர் கணக்கு போட்டிருக்கிறார். காரணம் ஈஸ்வரமூர்த்திக்கு அப்பகுதியில் உள்ள தனிப்பட்ட செல்வாக்கு.

ஈரோடு மாநகர்
இந்நிலையில், செல்வகுமார சின்னையன், ஆர்.பி. கதிர்வேல், என அதிமுகவில் பலரும் சீட் எதிர்பார்த்தாலும் தற்போதைய சூழலில் முதல்வரின் நம்பிக்கையை பெற்றவராக இருக்கிறார் ஈஸ்வரமூர்த்தி. இதனிடையே மொடக்குறிச்சியில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications