"நூல் விடுதே".. பாஜக பத்தியே பேசல.. அவருக்கு "வயசாயிடுச்சு".. தேமுதிக வேற பாணி.. கவனிக்கும் அதிமுக

பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய பிரச்சாரத்தில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறாராம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேமுதிக பிரச்சாரங்களில் ஒரு சிறுமாற்றம் தென்படுவதாக கூறுகிறார்கள்.. அது என்ன மாற்றம்? ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரதில் தேமுதிகவுக்கு கிடைக்கும் வரவேற்புகள் எப்படி உள்ளன?

தேமுதிகவின் பிரச்சார வேகம் கூடியுள்ள நிலையில், பிரேமலதாவின் வருகையும், ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி வருகிறது. இது அக்கட்சி தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கூட்டியும் வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக்கட்ட சூடுபிடித்துள்ளது. தேமுதிக இந்த முறை போட்டியிட வாய்ப்பில்லை என்றும், பாமக போல ஒதுங்கி கொள்ளும் என்றும் கணிக்கப்பட்ட நிலையில், திடீரென போட்டியில் குதித்தது.. காரணம், இந்த தொகுதியில் மட்டும் விஜயகாந்த்துக்கு ரசிகர்கள் ஏராளம் என்கிறார்கள்.. அதனால்தான், கடந்த 2011 தேர்தலிலேயே திமுகவை இந்த தொகுதியில் தோற்கடித்தது தேமுதிக.. இப்போதும் இந்த ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதாலேயே, அவர்களை நம்பியே பெரிதும் களமிறங்கி உள்ளார்களாம்..

 ஸ்ட்ராங்க் கேப்டன்

ஸ்ட்ராங்க் கேப்டன்

மேலும், இப்போதைக்கு எந்த அளவுக்கு தங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்க முடியுமோ அவ்வளவும் எம்பி தேர்தலில் தங்களுக்கு உதவும் என்றும் தேமுதிக கணக்கு போட்டுள்ளதாம். அதைவிட முக்கியமாக, விஜய பிரபாகரனை முன்னிறுத்தும் விதமாகவும் இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ள முயன்றுவருவதாகவும் தெரிகிறது. இதற்காகவே, ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ்ஷூம், விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும் பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இவர்களின் பிரச்சாரத்துக்கு பெருமளவு ஆதரவு கிடைத்து கொண்டிருக்கும் நிலையில், பிரேமலதாவும் என்ட்ரி தந்துள்ளார்...

 தப்பு தேதி

தப்பு தேதி

தொகுதிக்குள் வழக்கமாக தன்னுடைய பிரச்சார பேச்சால் மக்களை கவர்ந்தும் வருகிறார்.. ஆனால், ஓரிடத்தில் பிரச்சாரம் செய்தபோது, "வாக்குப்பதிவு நடக்கும் 29ம் தேதியன்று நீங்கள் தேமுதிகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று பிரேமலதா சொன்னார்.. உடனே கூட்டத்தில் இருந்தவர்கள், "தேதி தவறு, 27ம் தேதியன்று வாக்குப்பதிவு" என்றார்கள்.. உடனே தேதியை திருத்தி சொன்னார் பிரேமலதா.. எனினும், இந்த முறை தேமுதிக பிரச்சாரத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மாற்றம் தென்படுவதாக சொல்கிறார்கள்.. வழக்கமாக திமுகவை லிஸ்ட் போட்டு குறை சொல்லும் தேமுதிக, இந்த முறை அந்த அளவுக்கு திமுகவை விமர்சிக்கவில்லையாம்.. மாறாக, அதிமுகவையே பெரும்பாலும் விமர்சித்து வருவதாக சொல்கிறார்கள்.

 வயசான தென்னரசு

வயசான தென்னரசு

நேற்றைய தினம், அக்ரஹாரம் பகுதியில் பிரேமலதா பிரச்சாரம் செய்தபோதுகூட, "இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த தென்னரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் அவர் செல்லும் இடமெல்லாம் எதிர்பு தெரிவிக்கின்றனர். அதுக்கு மேல் பேசுவதற்கு அங்கு எதுவும் கிடையாது. அதிமுக வேட்பாளருக்கு வயதாகிவிட்டது... ஆனால், எங்கள் வேட்பாளரை பாருங்கள்.. அவரை போல இளமையானவர் இல்லை... இங்கு அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த தென்னரசு இதுவரை எதுவுமே செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமியை பார்த்து யாராவது நல்லவர் வருகிறார் என்று சொல்வார்களா? ஆனால், கேப்டனை பார்த்து சொல்வார்கள்" என்றெல்லாம் பேசினார்.

 விஜயகாந்த் மனசு

விஜயகாந்த் மனசு

எடப்பாடியை கடுமையாக எதிர்த்த பிரேமலதா, திமுகவை விமர்சிக்கவில்லை என்பதுடன், பாஜவை தாக்கி பேசுவதையும் தவிர்த்தார்.. விலைவாசி ஏறி விட்டது என்று மட்டுமே பொதுவாக பிரேமலதா கூறினாரே தவிர, பெட்ரோல், டீசல், கேஸ், உரம், நூல் ஆகியவற்றின் விலை ஏற்றம் என எதையுமே சுட்டிக்காட்டி பேசவும் இல்லை, பாஜக பேச்சை எடுக்கவும் இல்லை.. ஆக, அதிமுகவை மட்டும் விமர்சனம் செய்ததுடன், பாஜவை பற்றி வாய்திறக்காததும், திமுக பற்றி அவ்வளவாக விமர்சிக்காதமும் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. வரப்போகும் இடைத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் பரபரத்தன.. ஆனால், அதுகுறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

 சுதீஷ்ஷ்ஷா

சுதீஷ்ஷ்ஷா

ஆனால், 2 நாளைக்கு முன்பு, சுதீஷ் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம், முதலமைச்சர் முக ஸ்டாலினை, எடப்படி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு சுதீஷ், "எடப்பாடி பழனிசாமி, முதல்வரை எப்படி விமர்சனம் செய்தார் என்று தெரியவில்லை.. வேட்டி கட்டிய ஆண் மகனா? மீசை வைத்த ஆண் மகனா? என்றெல்லாம் பேசி இருந்தால் அது கண்டிப்பாக தவறுதான்" என்று சுதீஷ் வெளிப்படையாகவே கண்டித்திருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+