அபகரிக்க பார்க்குறாங்க! பாஜகவிற்கு ரத்த கண்ணீரே வரும்! ட்விட்டர் ஸ்பேசில் சீறிய அதிமுக! என்ன நடந்தது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் ஜெயிப்பார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இல்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: பாஜக அதிமுகவை அபகரிக்க முயற்சி செய்கிறது என்று குற்றச்சாட்டு அதிமுகவினர் இடையே எழுந்து உள்ளது. ட்விட்டர் ஸ்பேசில் அதிமுககாரர்கள் இதனால் கொதிப்புடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர், என்று மூத்த பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
இந்த தேர்தலுக்கு இடையில், பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி எப்போதும் போல தொடரும் என்று வெளிப்படையாக எடப்பாடி கூறி உள்ளார். இந்த நிலையில் பாஜகவை அதிமுக அபகரிக்க பார்ப்பதாக அதிமுகவினர் சிலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஐயன் கார்த்திகேயன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்று அண்ணாமலை கூறிவிட்டார். அண்ணாமலைதான் முதலில் தேர்தல் முடிவை டிக்ளேர் செய்தார். அதைதான் நானும் சொல்கிறேன். ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் ஜெயிப்பார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இல்லை. கடந்த தேர்தலில் இருந்த அதே கூட்டணிதான் இருக்கிறது. இதனால் அவர்தான் வெற்றிபெறுவார். கமல் வேறு ஆதரவு கொடுக்கிறார். இதனால் கூடுதல் அட்வான்டேஜ். ஆனால் எதிர் முகாமில் நிலைமை அப்படி இல்லை. எதிர் முகாமில் அதிமுக உள்ளேயே குழப்பம் உள்ளது.

சலசலப்பு
அதிமுக பாஜக இடையே கசப்பு உள்ளது. பாமக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அதிமுக 4 பக்கமாக பிளந்து உள்ளது. பாஜக அதிமுகவை அபகரிக்க முயற்சி செய்கிறது என்று குற்றச்சாட்டு உள்ளது. ட்விட்டர் ஸ்பேசில் அதிமுககாரர்கள் இதனால் கொதிப்புடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர், பாஜககாரரக்ளுக்கு ரத்த கண்ணீர் வரும் அளவிற்கு அதிமுகவினர் ஸ்பேசில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் திமுக கூட்டணிக்கு ஆதரவு உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி மீது அதிருப்தி இருந்தாலும் எதிர் அணி பெரிய குழப்பத்தில்தான் உள்ளது.

கூட்டணி
கூட்டணியாக பார்த்தால் எதிர் தரப்பில் பெரிய சலசலப்பு உள்ளது. இப்போது அதிமுக முறையான வேட்பாளரை அறிவித்துவிட்டாலும் கூட, பழைய மாதிரி இல்லை. உட்பக்கம் மோதல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதிமுக இப்போதும் வீக்காகவே உள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் எல்லாம் முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்துவிடுவார். அதிமுகவை மீட்க வேண்டும் என்பதே எடப்பாடியின் இப்போதைய நோக்கம். அதிமுகவை இந்த இடைத்தேர்தலில் வெல்ல வைக்க வேண்டும் என்பதெல்லாம் அவரின் நோக்கம் இல்லை. அண்ணாமலையை சந்தித்து இவர்கள் பேசுவதே எடப்பாடியின் வீக்னஸைத்தான் காட்டுகிறது.

எதிர் வாக்குகள்
திமுகவின் எதிர் வாக்குகளை யார் பெறுகிறார்கள்? முன்பு ஜெயலலிதா பெற்றார். ஆனால் இப்போது எடப்பாடி பெறுவார் என்று உறுதியாக சொல்ல முடியுமா? எடப்பாடி அந்த இடத்திற்கு வந்துவிட்டாரா? எடப்பாடி பலமானவர் என்றால் அவர் ஏன் அண்ணாமலையை சந்திக்கிறார், ஆதரவு கேட்கிறார். பாஜகவின் 1-2 சதவிகித வாக்குகளை வைத்துக்கொண்டு அதிமுக வெல்ல போகிறதா? உள்ளாட்சி தேர்தலில் பாஜகவால் தமிழ்நாடு முழுக்க வேட்பாளரை கூட நிறுத்த முடியவில்லையே. அவர்களிடம் போய் ஏன் எடப்பாடி உதவி கேட்கிறார். இபிஎஸ் - ஓபிஎஸ் மோதலில் தங்களுக்கு ஆதரவு வேண்டும் என்றுதான் எடப்பாடி அண்ணாமலையை போய் சந்திக்கிறார்.

கட்சி மோதல்
உட்கட்சி மோதல் விவகாரத்தில் பாஜக தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை உதவியை எடப்பாடி நாடுகிறார். இந்த தொகுதியும் ஏற்கனவே காங்கிரஸ் வென்ற தொகுதிதான். அதனால் இது எடப்பாடி வலிமையாக இருக்கும் இடம் என்று சொல்ல முடியாது. பாஜக வேண்டாம் என்று எடப்பாடியால் சொல்ல முடியுமா? பாஜகவிற்கு எதிராக சின்ன தலைவர்கள், தொண்டர்கள் பேசுவது போல எடப்பாடியால் பேச முடியுமா? எடப்பாடியின் கடிவாள் பாஜகவிடம் பலமாக இருக்கிறது. அதனால் அவர் பேச மாட்டார், என்று ஐயன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
-
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
அமித்ஷாவுக்கு டப்பிங் கொடுக்க வெக்கமா இல்லையா.. எடப்பாடியை வெளுத்து வாங்கிய சிதம்பரம் -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
சம்பந்திக்காக சேராத இடம் சேர்ந்து.. வஞ்சத்தில் வீழ்ந்த எடப்பாடி! வஞ்சகன் மோடி! முத்தரசன் அட்டாக்! -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications