அனல் தணிந்தது.. ஈரோட்டில் பிரசாரம் ஓய்வு.. தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேறினர்
ஈரோடு தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், ஈரோட்டில் முகாமிட்டு இருந்த வெளிமாவட்டத்தினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியேறினர்.
ஈரோடு: ஈரோடு தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், ஈரோட்டில் முகாமிட்டு இருந்த வெளிமாவட்டத்தினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியேறினர். இதனால், தங்கும் விடுதிகள், வெறிச்சோடின.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் இறைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் போட்டியிடுகிறார்கள். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அதிமுக. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் இறுதி நாளான இன்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளாரை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டர். இந்த நிலையில் ஈரோடு தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
பிரசாரம் ஓய்ந்ததையடுத்து சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தொடர்பில்லாத பிற மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் தங்கும் விடுதி, மண்டபங்கள் மற்றும் தற்காலிககமாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பவர்கள் இன்று மாலை 6 ணிக்கு மேல் தங்க அனுமதி இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதன்படி வாக்கு சேகரிக்க ஈரோட்டில் முகாமிட்டு இருந்த வெளிமாவட்டத்தினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியேறினர். இதனால், தங்கும் விடுதிகள், வெறிச்சோடின.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications