Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்து சர்ச்சை.. சென்னிமலை கோவிலுக்கே போன அமைச்சர் சேகர் பாபு.. அங்கு சொன்னதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பிற மதத்தினரை தவறாக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது என்று எச்சரித்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் எம்பி சாமிநாதன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் துறைசார் அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்றனர்.

Chennimalai issue: Minister PK Sekar Babu warns Strict action against those who abuse other religions

இந்த ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வழிபட வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறது.

சென்னிமலையை எங்கள் மலையாக மாற்றுவோம் என பேசிய சரவணன் என்பவர் மீது கொலை மிரட்டல், மதக்கலவரம் துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மதங்களை பிரித்து பார்ப்போர் வளருவதை முதல்வர் ஸ்டாலின் ஒரு போதும் விரும்ப மாட்டார். தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று சேகர் பாபு கூறினார். மேலும் பேசிய சேகர் பாபு, அக்டோபர் 20ஆம் தேதி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் அமைதிக் குழுக் கூட்டம் நடைபெறும் என்றார். மேலும் 5,338 கோடி மதிப்பிலான 5,560 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சென்னிமலை விவகாரம் சர்ச்சையானது எப்படி? : ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கதொழவு கத்தக் கொடிகாடு என்ற பகுதியில் ஜான் பீட்டர் என்பவரது வீட்டில் கிறிஸ்தவர்களின் ஜெபக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ஜெப கூட்டம் நடத்த இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடையே மோதலும் ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் 2 பேர் கைதும் செய்யப்பட்டனர்.

ஏசுமலை என சர்ச்சை பேச்சு: இதனிடையே ஜெபக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி அமைப்பினரைக் கண்டித்து சென்னிமலையில் கடந்த செப்டம்பர் 26-ந் தேதி கிறிஸ்தவ முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிறிஸ்தவ முன்னணியின் தலைவர் சரவணன் ஜோசப், சென்னிமலையின் பெயரை கல்வாரி மலை அல்லது ஏசு மலை என பெயர் மாற்றம் செய்வோம் என எச்சரிக்கை விடுத்து பேசியதால் சர்ச்சை எழுந்தது.

இந்து முன்னணி சென்னிமலை: இதனால் பிரச்சனை வேறுமாதிரி மாறியது. கிறிஸ்தவ முன்னணியின் தலைவர் சரவணன் ஜோசப்பின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று "சென்னிமலை எங்கள் மலை" என முழக்கமிட்டனர். மேலும் சரவணன் ஜோசப்பை கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் சென்னிமலையில் பதற்றம் ஏற்பட்டது.

மன்னிப்பு கேட்டு வீடியோ: இதனிடையே சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் குணசேகரன் சாமுவேல் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் தனது வீடியோவில், சென்னிமலையில் நடந்தது வன்மைக்குரிய காரியம் என்று கண்டித்ததுடன், மற்றவர்கள் வழிபடும் இடத்திற்கு சென்று தான், நீங்கள் ஏசுவை பிரார்த்தனை செய்ய வேண்டும் என, பைபிளில் சொல்லப்படவில்லை என்று கூறினார். மேலும் இது வேண்டும் என்று செய்யப்பட்டதாக தான் கருதுவதாகவும், அப்படிப்பட்டவர்கள் மீது இந்த அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களும் துணை போவதாக அர்த்தம் என்றும் கூறினார்.

கிறிஸ்தவ முன்னணி : ஒரு சிலர் சேர்ந்து, கிறிஸ்தவ முன்னணி எனக் கூறி, பிற மதத்தினருக்கு துன்புறுத்துதலை, மன உளைச்சலை ஏற்படுத்துவதை கண்டிப்பதாகவும், அவர்களை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குணசேகரன் சாமுவேல் வலியுறுத்தினார். இதற்கு யாரோ பின்னணியில் இருந்து உதவி செய்வதாகவும். பிற மதத்தினர், குறிப்பாக, ஹிந்து மதத்தினரின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனம் திறந்த மன்னிப்பை கேட்டுக் கொள்வதாகவும் பாதிரியார் குணசேகரன் சாமுவேல் தனது வீடியோவில் கூறியிருந்தார்.

சரவணன் ஜோசப் கைது: இந்நிலையில் ஏசுமலையாக சென்னிமலையை மாற்றுவோம் என்று பேசிய குற்றச்சாட்டில் கிறிஸ்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த சரவணன் ஜோசப்பை போலீசார் நேற்று செங்கல்பட்டில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+