ஈரோடு மாணவனின் காலணியில் பதுங்கிய நாகபாம்பு .. தொட்ட உடன் நடந்த பெரிய ட்விஸ்ட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 10 வயது மகன் 5ம் வகுப்பு படிக்கிறார். இவரது செருப்பிற்குள் கோதுமை நாகப்பாம்பு புகுந்துள்ளது. முன்னதாக வீட்டிற்கு நுழைந்த பாம்பு எங்கே நுழைந்தது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீடு முழுக்க தேடியும் கிடைக்காதநிலையில், பாம்பு பிடி வீரர் யுவராஜ் தேடி பார்த்த போது, மாணவனி காலணியில் நாகப்பாம்பு பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், தனியார் வங்கி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன், தனது நண்பர்களுடன் விளையாடிவிட்டு, காலணிகளை வீட்டின் வாசலில் கழற்றிவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

கோதுமை நாகம்
அப்போது, வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்ததை அக்கம் பக்கத்தினர் கவனித்து தகவல் அளித்தனர். பாம்பு பிடி வீரர் யுவராஜிற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் வீடு முழுவதும் பல மணி நேரம் தேடியும் பாம்பு தென்படவில்லை. இறுதியில், வாசலில் இருந்த மாணவனின் காலணியைச் சோதனை செய்தபோது, அதற்குள் 4 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு சுருண்டு பதுங்கியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்தார்
காலணிக்குள் இருந்த பாம்பை யுவராஜ் லாவகமாக வெளியே எடுத்தார். வெளியே வந்த பாம்பு ஆக்ரோஷமாகப் படம் எடுத்து ஆடியது அங்கிருந்தவர்களை பீதியில் ஆழ்த்தியது. பின்னர் அந்தப் பாம்பு பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
பாம்புகள் எப்படி நுழைகிறது
உணவு மற்றும் தங்கும் இடம்தேடி பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன. குறிப்பாக செருப்பு ஸ்டாண்ட், படிக்கட்டுகள், வாஷிங் மெஷின் போன்ற மறைவான இடங்களில் இவை பதுங்கக்கூடும். எனவே, பொதுமக்கள் காலணிகளை அணியும் முன் அவற்றை நன்கு தட்டிச் சோதிப்பது அவசியம்," என யுவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலணிக்குள் பாம்பு வர காரணம்
கோதுமை நாகம் உள்பட எந்த வகையான பாம்பும் காலணிக்குள் புகுந்துவிடும் ஆபத்து அதிகம் இருக்கிறது. எனவே காலணிகளை எடுக்கும் போது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்கள் வீட்டிற்கு தவளைகள் அடிக்கடி வரும் என்றால், மிக கவனமாக இருக்க வேண்டும். காடுகளும் உங்கள் வீட்டை சுற்றி இருக்கிறது என்றாலும் கவனமாக இருங்கள். பள்ளி முடிந்து குழந்தைகள் காலணியை வெளியே விடுகிறார்கள் என்றால், அந்த பகுதியில் உள்ள கேட்டை பாம்புகள் நுழையாத அளவிற்கு வளை போட்டு வைக்கலாம். தவளை வருவதை தடுத்தால் பாம்புகள் நுழைவதையும் ஓரளவு தடுக்க முடியும். எனவே கேட்டில் இரும்பு வளையம் போடலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications