ஒருநாளும் சீமான் வெல்லப்போவதில்லை.. பிரபாகரனை முதலீடாக கொண்டு அரசியல் செய்கிறார்.. திருநாவுக்கரசர்!
பிரபாகரனை முதலீடாக வைத்து சீமான் அரசியல் செய்வதாக திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
ஈரோடு: பிரபாகரனை முதலீடாக வைத்து நாம் தமிழர் கட்சியின் சீமான் அரசியல் செய்து வருவதாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். அதேபோல் எந்த காலத்தில் சீமான் வெற்றிபெறப் போவதில்லை என்று கூறிய திருநாவுக்கரசர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவுக்கு பின், ஈவிகேஎஸ் இளங்கோவனை இடைத்தேர்தலில் போட்டியிட வற்புறுத்தினோம்.

திருநாவுக்கரசர் பேட்டி
ஏனென்றால் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ள தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகத்தான வெற்றியைப் பெறுவார். மக்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். இதில் திமுக கூட்டணி நிர்வாகிகள் பணியாற்றுவது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 24 மணி நேரமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை கண்காணித்து வருகிறார். அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், எம்எல்ஏ-க்கள் என அனைவருமே தங்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி
எதிர்காலத்தில் ராகுல் காந்தி தலைமையில் நல்லாட்சி அமைவதற்கான அஸ்திவாரத்தை இந்தத் தேர்தல் வெற்றி அமைக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரமாக இந்த இடைத்தேர்தல் வெற்றி இருக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இருக்கும் என்று தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிகள்
தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, நான் இதுவரை 45 ஆண்டு அனுபவ அரசியலில், ஏராளமான தேர்தலை சந்தித்துள்ளேன். தோல்வியை சந்திப்போம் என்று தெரிந்தவர்கள், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள். தோற்கப் போகும் நபர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவதாக எப்போதும் குற்றச்சாட்டை வைப்பார்கள் என்று தெரிவித்தார்.

கர்நாடகா வனத்துறை
தொடர்ந்து, கர்நாடகா வனத்துறை தமிழக மீனவரை கொலை செய்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு, கர்நாடக வனத்துறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கடுமையான கண்டனத்துக்குரியது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு அதிக இழப்பீடு வழங்கி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுகவின் லட்சணம்
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசிய ஆடியோ வெளியாகி இருப்பது என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த லட்சணத்தில் அதிமுக தற்போதைய தலைவர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆடியோ வெளிவந்துள்ளது என்று தெரிவித்தார். பின்னர், பிரதமர் வேட்பாளர் பற்றிய கேள்விக்கு, இந்தியாவை பொறுத்தவரை பாஜக இல்லா மாநிலத்தில் கூட காங்கிரஸ் கட்சி உள்ளது. எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளதால் காங்கிரஸ் இல்லாமல் எதிர்காலத்தில் ஆட்சி அமையாது. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்.

மோடிக்கு சிம்ம சொப்பனம்
அதே போன்று தான் மோடிக்கு மாற்றாக இருப்பவர் ராகுல்காந்தி என்பதை உணர்ந்ததால் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்தி தான் கூட்டணி அமையும். இதனால் பொது வேட்பாளராக ராகுல்காந்தி தான் இருப்பார். அதானி விவகாரத்தில் இதுவரை நிதியமைச்சர் மற்றும் பிரதமர் பதிலளிக்காமல் கிண்டல் செய்யும் வேலை செய்து வருகிறார்கள். பிரதமர் மோடிக்கு சிம்ம சொப்பனமாக ராகுல்காந்தி இருந்து வருவதால், அவரே பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று தெரிவித்தார்.

சீமான் பற்றி கருத்து
பின்னர் சீமான் பேச்சு பற்றிய கேள்விக்கு, சீமான் ஒரு விவகாரம் மட்டுமல்லாமல், ஏராளமான விவகாரங்களில் தவறாக தான் பேசி வருகிறார். அவருக்கான இளைஞர்களை வைத்து கொண்டும் பிரபாகரனை முதலீடாக வைத்து கொண்டு அரசியல் செய்து வருகிறார். இதனால் எந்த காலத்திலும் வெற்றி பெற போவதில்லை. பிரபாகரன் உயிரோடு இருப்பதாக யார் சொன்னாலும் நான் நம்ப தாயாராக இல்லை என்று தெரிவித்தார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications