ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வெற்றி உறுதி..அதிமுகவுக்கு இவ்வளவு தானா? ச ராஜநாயகத்தின் கருத்துக்கணிப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்றும்.. அதிமுக 24.5 சதவீத வாக்குகள் பெறும் என்றும் ச ராஜநாயகம் என்ற பத்திரிக்கையாளர் மக்களிடம் ஆய்வு நடத்தி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்
இதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிகவும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அதன்படி நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும், தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவரும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் ஈரோட்டில் முகாமிட்டு தங்கள் கட்சிகளுக்காக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கருத்துக் கணிப்பு முடிவு
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளை மக்கள் ஆய்வு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் பேராசிரியர் ச.ராஜநாயகம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் இடத்தில் காங்கிரஸ்
எங்கள் கள ஆய்வின் படி காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அதிமுக 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. நாம் தமிழர் கட்சி 9.5 சதவீத வாக்குகளுடன் 3-ம் இடம் பெற்றுள்ளது. தேமுதிக. 2 சதவீத வாக்குகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. தற்போது மவுனம் காத்து வரும் 21% வாக்காளர்களின் வாக்குகளையும் சேர்த்த கருத்துக் கணிப்பின் படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி 65 சதவீத வாக்குகளும் அதிமுக 41 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் 17 சதவீதம் மற்றும் தேமுதிக 4 சதவீத வாக்குகளையும் பெறும்.

நாம் தமிழர் கட்சிக்கு...
மவுன வாக்காளர்களின் பெரும்பான்மை வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்பட்சத்தில் மற்ற அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும். அதிமுகவிற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் காங்கிரசின் வாக்கு வேறுபாடு குறையுமே தவிர, காங்கிரஸ் வெற்றியில் பாதிப்பு இல்லை. அதே சமயத்தில் 21 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு 29.5 சதவீமும், காங்கிரஸ் கட்சிக்கு 28.5 சதவீதமும் அதிமுகவுக்கு 17 சதவீதமும், தேமுதிகவுக்கு 3 சதவீதமும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications