ஈரோட்டில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி- மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு: ஈரோட்டில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்களுக்கு பூவிருந்தவல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஈரோட்டில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர் கொரோனா அறிகுறியுடன் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் தாய்லாந்து நாட்டவர் தங்கியிருந்தனர்.
இவர்களில் சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா அறிகுறியால் பாதிக்கப்பட்ட 7 பேரும் பெருந்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications