“ஈரோடு முத்துசாமி..கரூர் செந்தில் பாலாஜி.. எல்லாரையும் முடிச்சு அனுப்புங்க” - சிடிஆர் நிர்மல்குமார்
ஈரோடு: "2026 சட்டசபை தேர்தலில் ஈரோடு முத்துசாமி முதல் கரூர் செந்தில் பாலாஜி வரை யாரும் ஜெயிக்கக்ப்போவது கிடையாது. அவர்கள் தங்கள் தொகுதிகளை மாற்ற முடிவு எடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் எங்கு போனாலும் விடாதீங்க.. எல்லோரையும் முடிச்சு அனுப்புங்க" என தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பிரசாரப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது முதல் பொதுவெளி பிரச்சாத்தை தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே இன்று நடத்தி வருகிறார் தவெக தலைவர் விஜய்.

இந்தக் கூட்டத்தில் தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பேசுகையில், "விவசாயத்தில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்குவது கொங்குப் பகுதி. கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டோடு இந்த மக்கள் திமுகவை முடித்துக் கட்டினார்கள். 15 வருடங்கள் ஆகிவிட்டது. நியாயமாக உழைத்த கொங்கு மக்களிடம், பணம் வசூல் செய்ததால் மொத்தமாக திமுகவை துடைத்து வெளியே போட்டுவிட்டனர்.
தொழில் துறையில் சிறந்து விளங்கும் கொங்கு பகுதிக்கு தொழில் துறை அமைச்சர் பதவி தரவில்லை. இதுவரை இருந்த அனைத்து அரசுகளும் இப்பகுதி மக்களுக்கு உதவி செய்யவில்லை. இப்பகுதி மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்ய 2026ல் விஜய் தலைமையிலான ஆட்சி வரும். 2026ல் விஜய் முதலமைச்சராக அமர்வார்.
2026 சட்டசபை தேர்தலில் ஈரோடு முத்துசாமி முதல் கரூர் செந்தில் பாலாஜி வரை யாரும் ஜெயிக்கக்ப்போவது கிடையாது. அவர்கள் தங்கள் தொகுதிகளை மாற்ற முடிவு எடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் எங்கு போனாலும் விடாதீங்க.. எல்லோரையும் முடிச்சு அனுப்புங்க" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications