விஜயகாந்த் மகன் சின்னப்பையன் என நினைச்சிடாதீங்க.. ஈரோடு பிரசாரத்தில் டென்ஷன் ஆன விஜய பிரபாகரன்

ஈரோட்டில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குசேகரித்த விஜய பிரபாகரன், இந்த மக்களுக்கு எதாவது ஒன்று என்றால் உடனே வந்து நிற்பேன் என்று பேசினார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய பிரபாகரன், "விஜயகாந்த் மகன் சின்னப்பையன் என்று மட்டும் யாரும் நினைக்காதீங்க... இந்த மக்களுக்கு எதாவது ஒன்று என்றால் உடனே வந்து நிற்பேன். விஜயகாந்தை பார்த்து இருக்கலாம்.. பிரேமலதாவை பார்த்து இருக்கலாம். இந்த இரண்டு பேரையும் சேர்ந்த விஜய பிரபாகரனை நீங்க பார்க்குறீங்க" என்று கூறினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால், தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஈரோட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலரும் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனல் பறக்கும் ஈரோடு பிரசாரம்

அனல் பறக்கும் ஈரோடு பிரசாரம்

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த கடந்த சில தினங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் ஈரோட்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்து வருகிறது.

தேமுதிகவும் போட்டி

தேமுதிகவும் போட்டி

அதேபோல், விஜயகாந்தின் தேமுதிகவும் ஈரோடு தேர்தல் களத்தில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அக்கட்சியின் சார்பில் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல், தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சவுண்டு எல்லாம் இங்கே விடக்கூடாது

சவுண்டு எல்லாம் இங்கே விடக்கூடாது

இதனிடையே விஜய பிரபாகரனின் பிரசாரம் செய்த போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த விஜய பிரபாகரன் சவுண்டு எல்லாம் இங்கே விடக்கூடாது அனுமதி வாங்கி விட்டுத்தான் பேசுகிறோம் என ஆவேசமாக பேசினார். விஜயபிரபாகரன் பேசியதாவது:-சவுண்டு எல்லாம் இங்கே விடக்கூடாது. முறையான பெர்மிஷன் வாங்கிதான் பேசிட்டு இருக்கிறோம். இந்த சீன் எல்லாம் லெட்டர் பேர்டு கட்சிகளிடம் வைத்துக்கொள்ளுங்கள்.. எங்க கிட்ட வச்சிக்காதீங்க..

 சின்னப்பையன் என்று மட்டும்

சின்னப்பையன் என்று மட்டும்

யாராக இருந்தாலும்.. மரியாதையா பேசிட்டு இருக்கோம். மரியாதையை காப்பாத்திக்கோங்க.. பெர்மிஷன் வாங்கி முறைப்படி காவல்துறை அனுமதியோடுதான் பேசிட்டு இருக்கிறோம். விஜயகாந்த் மகன் சின்னப்பையன் என்று மட்டும் யாரும் நினைக்காதீங்க... இந்த மக்களுக்கு எதாவது ஒன்று என்றால் உடனே வந்து நிற்பேன். விஜயகாந்தை பார்த்து இருக்கலாம்.. பிரேமலதாவை பார்த்து இருக்கலாம். இந்த இரண்டு பேரையும் சேர்ந்த விஜயபிரபாகரனை நீங்க பார்க்குறீங்க"என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+