Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்ல்லுன்னு ஏறிய திமுக கிரேஸ்.. இதுக்கெல்லாம் உதவியது சீமானா? விஜய்யின் ரோல் இருக்கா? ஈரோடு ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.. திமுக, நாம் தமிழர் கட்சிகள் முன்னெடுத்திருந்த தேர்தல் வியூகங்கள் அவர்களுக்க கைகொடுத்தனவா? திமுகவின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும், இந்த வெற்றியில் வேறு ஏதாவது பின்னணி காரணங்களும் அடங்கியிருக்கின்றனவா?

வழக்கமாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது.. அந்தவகையில், திமுகவின் வெற்றி ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒன்று என்றாலும், எத்தனை சதவீதத்தில் வெற்றி பெற போகிறது? என்பதைத்தான் மொத்த தமிழகமும் உற்றுநோக்கியது. அதேபோல, திமுகவுக்கான எதிர்ப்பு ஓட்டுக்கள் எவ்வளவு? என்பதையும் அரசியல் கட்சிகள் கவனித்து வருகின்றன.

erode east by election vote count

தவெக : நாம் தமிழர் கட்சி மட்டுமே எதிர்த்து களம் கண்டிருந்தாலும், இன்றைய தினம் பெறப்போகும் வாக்குகள் அத்தனையும் நாம் தமிழர் கட்சிக்குரியது என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. அதிமுக, பாஜக, பாமக, தவெக என கட்சிகள் போட்டியடாத சூழலில், இந்த கட்சிகளை சார்ந்தவர்களின் ஓட்டுக்களும் நாம் தமிழர் கட்சிக்கு விழுந்திருக்க வாய்ப்பு உண்டு. அப்படியிருந்தும்கூட, வாக்கு எண்ணிக்கை காலையிலிருந்தே திமுகவுக்கே முன்னணியிலும், மெஜாரிட்டியிலும் இருந்து வந்தது .

திமுக எப்படியும் அமோக வெற்றி வெறும் என்றும் நிபுணர்கள் ஏற்கனவே கணித்து சொல்லி விட்டார்கள்.. அதற்காக அவையெல்லாம் திமுகவுக்கான ஆதரவு ஓட்டுக்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அத்துடன் நாம் தமிழர் கட்சியை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று திமுக வேகம் காட்டினாலும்கூட, சீமான் மற்றும் விஜய்யின் செயல்பாடுகளே திமுக வெற்றிக்கு உதவியாக சொல்லப்படுகிறது.

பெரியார்: இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, பெரியாரை கையில் எடுத்து, விமர்சித்திருந்தார் சீமான். இதனால் தங்களது ஓட்டு எண்ணிக்கை உயரும் என்றும் கணித்திருந்தார்.. பெரியாரை விமர்சித்தது தமிழகத்தில் பரவலான அதிர்வலைகளை இது ஏற்படுத்தினாலும், ஈரோட்டிலேயே சீமான் பேசியதும், அதிலும், மீண்டும் மீண்டும் இதைபபற்றியே பேசியதும்தான், ஓவர்டோஸ் ஆகிவிட்டது என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, பெரியாரை பற்றி, பொதுவான நேரத்தில் பேசியிருந்தால், அது மக்களை சிந்திக்க வைத்திருக்கும். ஆனால், தேர்தல் நேரத்தில், காரணமே இல்லாமல் பேசியது, பெரிதாக எடுபடவில்லை என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஈரோட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, பெரியாரை பற்றி சிந்திக்கவோ, பெரியார் சொன்னதை ஆராயவோ, யாருக்கும் நேரமில்லை.. எனவே, சீமானின் வியூகம் தோல்வியடைய இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ்: அத்துடன், ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளையே, அச்சுபிசகாமல சீமான் பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.. இதுவும் நாதகவின் பின்னடைவுக்கு காரணமாவிட்டதாக கருதப்படுகிறது.

இதில் தவெக விஜய்யையும் சொல்ல வேண்டியிருக்கிறது. விக்கிரவாண்டியில் விஜய் நடத்திய மாநாட்டை பார்த்து, திமுகவுக்கே லேசான உதறல் வந்ததாம்.. அதனால்தான் திமுகவின் சில சீனியர்கள்கூட, விஜய்யை விமர்சித்திருந்தார்கள்.. ஆனால், மாநாட்டுக்காக வந்தவர்கள் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக இரங்கல் அறிக்கைகூட வெளியிடாதது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், ஆளுநரை சந்திக்கும்போது, பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்த்தது, இவையெல்லாம் விஜய்க்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது..

திமுக குறி: அதுமட்டுமல்லாமல், கட்சி துவங்கியதில் இருந்து இப்போதுவரை, அளவுக்கு அதிகமாக திமுகவை மட்டுமே குறிவைத்து விஜய்யின் பேச்சுக்கள் அமைந்துள்ளதும், ஓவர்டோஸை தந்துவிடுகிறது. ஆக, திமுகவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் எல்லாம், திமுகவின் சாதனைகளால் மட்டுமே கிடைத்த வாக்குகளாக கருத முடியாது.. இதற்கு விஜய், சீமான் உள்ளிட்டோரின் ஓவர்டோஸ் அரசியலும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+