பெரியாரை தப்பா பேசிட்டு ஈரோட்டிலயே எப்படி ஓட்டு கேக்குறீங்க! நாதக வேட்பாளரிடம் திமுக நிர்வாகி கேள்வி
ஈரோடு: ஈரோடு அன்னை சத்யா நகரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பரப்புரை மேற்கொண்ட போது அங்கு வந்த 15 வது வார்டு திமுக மகளிரணி அமைப்பாளர் சசிகலா "பெரியார் குறித்து சீமான் இழிவாக பேசியுள்ளபோது நீங்கள் எப்படி இங்கு வந்து வாக்கு கேட்கிறீர்கள்" என கேள்வி எழுப்பினார். இதனால் பரபரப்பு எழுந்தது.
இதற்கு, நாம் தமிழர் கட்சியினர் வாக்குப் பதிவிற்கு நாட்கள் குறைவாக இருப்பதால் தேர்தலுக்கு பிறகு முழு விவாதம் வைத்துக் கொள்ளலாம் என்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக , தேமுதிக , தவெக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை.
இதனால் திமுகவும் நாதகவும் நேரடியாக போட்டியிடுகின்றன. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமாரும் நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகிறார்கள். வேட்புமனுக்கள் தாக்கல் செய்து இவர்கள் இருவரது வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் சந்திரகுமார், சீதாலட்சுமி மட்டுமல்லாது சுயேச்சைகள் உள்பட களத்தில் 45-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வி.சி.சந்திரக்குமாருக்கு அமைச்சர் முத்துசாமி,ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன், கூட்டணி கட்சியினர் வாக்கு கேட்டு வருகிறார்கள்.
அது போல் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் தனது நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அவர் இன்று அன்னை சத்யா நகரில் வாக்கு கேட்க சென்றிருந்தார். அப்போது ஒரு பெண்ணிடம் வாக்கு கேட்டார். அவர் போன் பேசிக் கொண்டிருந்ததால் எதுவும் பேசாமல் இருந்தார்.
இதையடுத்து அந்த பெண் போன் பேசிவிட்டு நாதக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் போய், "உங்கள் தலைவர் சீமான் பெரியார் குறித்து இழிவாக பேசிவிட்டு இப்போது எப்படி இங்கேயே வாக்கு சேகரிக்கிறீர்கள்?" என கேட்டார்.
அப்போது அங்கிருந்த நாதக நிர்வாகி ஆண் ஒருவர், "நீங்கள் கேட்பது புரிகிறது, ஆனால் தற்போது வாக்கு பதிவிற்கு நாட்கள் நிறைய இல்லை. இதனால் இப்போது அது குறித்து விவாதிக்க முடியாது" என்றார் .
அதற்கு அந்த பெண் , "நான் உங்களுடன் விவாதிக்க வரவில்லை. நான் போனில் பேசிக் கொண்டிருந்ததால் என்னால் கேட்க முடியவில்லை, அதனால்தான் வண்டியில் உங்களை தேடி வந்து கேட்கிறேன்" என்றார்.
அதற்கு அந்த ஆண் நிர்வாகி, "நீங்கள் கேட்பதில் தவறு இல்லை. வாக்கு பதிவு முடியட்டும், நாங்கள் உங்கள் வீட்டிற்கு வருகிறோம், நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள், அங்கு விவாதிக்கலாம். நானும் பெரியாரிஸ்ட்தான். எனது அப்பாவும் பெரியார் கொள்கைவாதிதான். அவர் பெரியாருடன் 50 ஆண்டுகள் இருந்துள்ளார்.
எங்கள் வீட்டு நூலகத்தில் பெரியார் கருத்துகள் கொண்ட 1000 புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் கேட்பது சரிதான். ஆனால் தற்போதைய சூழல் என்பது ஒருவர் பேசுவதை வெட்டி வெட்டி போடுவதுதான். அந்த புத்தகத்தில் அனைத்தும் இருக்கிறது. உங்களுக்கான விளக்கத்தை நான் கொடுக்கிறேன். அதற்கான காலம் நேரம் இது இல்லை, உங்கள் பெயர் என்ன என கேட்டார்.
அப்போது அந்த பெண், நான் திமுக அமைப்பாளராக உள்ளேன், என் பெயர் சசிகலா என்றார். இதையடுத்து இருவரும் கலைந்துச் சென்றனர்.
பெரியார் குறித்து சீமான் பேசுகையில் அம்பேத்கரையும் பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண், இருவரின் சிந்தனையும் ஒன்றா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர்.

தனது பெரும் செல்வத்தை நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்காக விற்றவர் வ.உ.சி. அவர் கடைசி காலத்தில் வறுமையில் தள்ளப்பட்டார். இவர் போராளியா, பெரியார் போராளியா?
சமூகநீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கிறதா அல்லது இட ஒதுக்கீட்டிற்கும் ஆனைமுத்துவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா, போராடி பெற்றுக் கொடுத்தது ஆனைமுத்தா, பெரியாரா என சீமான் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில் பெரியார் மண்ணான ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications