பிரபாகரன் நேரில் வரட்டும்.. அப்புறம் பேசுவோம்..தேவையில்லாமல் குழப்பாதீங்க.. கடுகடுக்கும் சீமான்
பிரபாகரன் நேரில் வரும் போது பேசுவோம்.. அதுவரை குழப்பாமல் இருக்க வேண்டும் என்கிறார் சீமான்.
ஈரோடு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலில் நேரில் வரட்டும்.. அதன்பின்னர் பேசுவோம்.. அதுவரை குழப்பாமல் இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் இருக்கிறார். இதனை அவரது அனுமதியுடன் உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கிறேன் என்றார்.

மேலும், தமிழீழ விடுதலைக்கான திட்டத்தையும் பிரபாகரன் அறிவிப்பார் என்பதுடன் ஒரு பக்க அறிக்கை ஒன்றையும் நெடுமாறன் வெளியிட்டார். அந்த அறிக்கையில், சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம் எனவும் நெடுமாறன் கூறியிருந்தார்.
பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தொடர்பாக சீமான் இன்று கூறியதாவது: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு என்னிடம் பதில்கள் இல்லை. ஆனால் சில கேள்விகள் மட்டும் இருக்கின்றன. என் தம்பி பாலச்சந்திரனை பலி கொடுத்துவிட்டு பிரபாகரன் மட்டுமே தப்பி சென்றிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா?
பிரபாகரன், எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த மண்ணைவிட்டு நாட்டைவிட்டு போகமாட்டேன் என இறுதிவரை நின்று யுத்தம் புரிந்தவர். அப்படிப்பட்டவர் தம்முடைய உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு தப்பி செல்லக் கூடிய கோழையா அவர்? யுத்தம் செய்து மிகப் பெரிய பேரழிவை எதிர்கொண்டிருக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் 14 ஆண்டுகள் எதுவுமே பேசாமல் ஒரு இடத்தில் பதுங்கியே இருக்கக் கூடியவரா பிரபாகரன்? அப்படியா நீங்கள் நினைக்கிறீர்கள்?
பிரபாகரன் சொல்லிவிட்டு வரக் கூடியவர் அல்ல.. வந்துவிட்டு சொல்லக் கூடியவர்தான். பிரபாகரனின் பண்பும் பழக்கமும் அதுதான். அதுவரை தேவையில்லாமல் குழப்பக் கூடாது. ஒருநாள் பிரபாகரன் தோன்றுவார் என கூறுகிறார்கள்தானே.. அவர் தோன்றும்போது தோன்றட்டும்.. பெரியாரிடம் கடவுள் இல்லை என்கிறீர்களே உங்கள் முன் கடவுள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர்.. அன்று முதல் கடவுள் இருக்கிறார் என சொல்வேன் என்றார். அதேபோலத்தான் பழ.நெடுமாறன் சொல்வதைப் போல பிரபாகரன் நேரில் வந்துவிட்டால் அப்போது அதைப் பற்றி பேசலாம். இவ்வாறு சீமான் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications