ஸ்ட்ரெயிட்டா உதயநிதி ஸ்டாலினிடமே போன செல்லூர் ராஜு.. ஆரம்பித்த அட்டாக்!
அரசியலில் உதயநிதி ஸ்டாலின் ஒரு கத்துக்குட்டி என்று செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
ஈரோடு: அரசியலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கத்துக்குட்டி என்றும், அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். அதேபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துக் கல்லூரிக்கான கட்டமைப்பு வசதிகள் தான் உருவாக்கப்படவில்லை என்று கூறிய செல்லூர் ராஜூ, அந்தக் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரத்தில் படித்து வருவதாக கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மாலை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதனால் முக்கிய கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமாகியுள்ளது.
அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொரு தெருவாக சென்று பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அதேபோல் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் என ஒரு படையே தீவிரமாக திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

செல்லூர் ராஜூ பிரச்சாரம்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்ட மன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஜீவானந்தம் வீதியில் தனது தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரடியாக பார்த்து பேசி செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செல்லூர் ராஜூ பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், நீட் தேர்வு வந்தற்கு முக்கிய காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியான காங்கிரஸ் - திமுக தான். அன்றைக்கு அமைச்சராக இருந்த காந்தி செல்வன் கையெழுத்திட்டார். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா விலக்கு கேட்டார்கள். அதன் அடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யபட்டது. நீட் தேர்வு வழக்கில் ஆதரவாக வாதாடியவர் நளினி சிதம்பரம்.

நீட் தேர்வு விவகாரம்
நீட் தேர்வை ரத்து செய்ய சூட்சமம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதுவரை ரத்து செய்யவில்லை. பெரியார், அண்ணா ஆகியோர் எந்த காங்கிரசை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என நினைத்தார்களோ, இன்று அந்த காங்கிரஸை வளர்க்க திமுக ஒன்றுபட்டு நிற்கிறது. அதேபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டமைப்பு வசதிகள் தான் உருவாக்கப்படவில்லை.

உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டி
ஆனால் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று ராமநாதபுரத்தில் படித்து வருகின்றனர். உதயநிதி அரசியலில் கத்துக்குட்டி, அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை என்று கூறினார். பின்னர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. குழப்பமான சூழ்நிலைமாறி ஒற்றை தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications