Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்பட 5 பேர் தப்பினர்.. என்னாச்சு?

பெங்களூரில் இருந்து திருப்பூர் நோக்கி வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஹெலிகாப்டரில் சென்ற நிலையில் மோசமான வானிலை காரணமாக ஈரோடு அருகே அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு ஹெலிகாப்டரில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இன்று காலை சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான காலநிலையால் அவரது ஹெலிகாப்டர் ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் அவசரஅவசரமாக தரையிறக்கப்பட்டதால் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்பட 5 பேர் தப்பினர்.

பெங்களூரில் வாழும் கலை அமைப்பை நிறுவி நடத்தி வருபவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இவர் தமிழ்நாட்டின் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். இதற்காக அவர் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் பயணத்தை தொடங்கினார்.

ஹெலிகாப்டரில் ரவிசங்கர் மற்றும் 4 பேர் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் மலை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

மோசமான வானிலை

மோசமான வானிலை

அப்போது திடீரென்று மோசமான வானிலை நிலவியதாக கூறப்படுகிறது. பனிமூட்டம் உள்ளிட்ட காலநிலை ஹெலிகாப்டரை மேற்கொண்டு இயக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

அவரச அவரசமாக தரையிறக்கம்

அவரச அவரசமாக தரையிறக்கம்


அதன்படி உகினியம் என்ற கிராமத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் அப்பகுதி மக்கள் குழம்பினர். மேலும் சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து வந்து என்ன நடந்தது? என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாகினர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

விசாரணை நடத்தியதில் கடுமையான பனிமூட்டம் காரணமாக பாதை தெளிவாக தெரியாததால் அவசரஅவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து பனிமூட்டம் இருந்ததால் ரவிசங்கர் அங்கேயே இருந்தார். இதையடுத்து கிராம மக்கள் பலரும் அவரிடம் ஆசி பெற்றனர்.

ஒரு மணிநேரத்துக்கு பிறகு..

ஒரு மணிநேரத்துக்கு பிறகு..

இதையடுத்து அடுத்த ஒரு மணிநேரத்துக்கு பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்பட அனைவரும் ஹெலிகாப்டரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக ஹெலிகாப்டர் பைலட் மோசமான வானிலையை கணித்து உடனடியாக ஹெலிகாப்டரை மேற்கொண்டு இயக்காமல் தரையிறக்கி உள்ளார். இதன்மூலம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்பட 5 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+