திமுக – காங்கிரஸ் கூட்டணி நிலைக்காது.. பழம் தானாக பழுத்தால் தான் சுவை.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
ஈரோடு: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக ன 4 முனை போட்டி நிலவுகிறது. அப்போது எடப்பாடி பழனிசாமி, திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகம். பழம் தானாக பழுத்தால் தான் சுவையாக இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.
ஈரோடு பவானிசாகர் தொகுதி அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி தானாக அமைந்தது. இது வலிமையான கூட்டணி. திமுக - காங்கிரஸ் கூட்டணி இருப்பது சந்தேகம். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு தர வேண்டும், தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிடின் பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்பி ஒருவர் கூறியுள்ளார்.

பழம் தானாக பழுக்க வேண்டும்
திமுக கூட்டணி நிலைக்குமா என்று தெரியவில்லை. திமுக கூட்டணி ஆட்டம் கண்டுவிட்டது. பழம் தானாக பழுக்க வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும். 182வது தொகுதியாக பவானி சாகர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறேன். எந்தக் கட்சியும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்யவில்லை. படிப்படியாக உழைத்து முதல்வரானவன் நான். அப்பா வழியில் முதல்வரானவர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுவிட்டது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதை பொருள் பயன்பாடு அதிகரித்துவிட்டது. 6,991 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த நிரந்திர டிஜிபி வேண்டும். முழு நேர டிஜிபியை நியமிக்கவில்லை. கேவலமான ஆட்சியை ஸ்டாலின் நடத்தி கொண்டிருக்கிறார். காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. செந்தில் பாலாஜி பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று டாஸ்மாக்கில் ஊழல் செய்தார்.
வரி மேல் வரி
ஏழைகளிடம் கொள்ளையடித்து டாஸ்மாக்கில் 23,000 கோடி ஊழல் செய்துள்ளனர். அந்த ஊழல் பணத்தை எடுத்துதான் வாக்காளர்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளனர். மக்கள் உஷாராக இருக்க வேண்டும். கொள்ளை பணத்தை வைத்து மக்களை சந்திக்கிறார்கள். நாங்கள் திட்டங்களை வைத்து சந்தித்தோம். இந்த தேர்தல் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆட்சி.
சரியான நிர்வாகம் இல்லாததால் உயர்க்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 5.50 லட்சம் பேர் அரசுப் பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள் என்று வாக்குறுதியளித்தனர். ஒரு லட்சம் பணியிடங்கள் தான் நிரப்பப்பட்டன. வரி மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறார்கள். ஸ்டாலின் தன் வீட்டு மக்களை தான் யோசிப்பார். நாங்கள் தான் நாட்டு மக்களை பற்றி யோசிப்போம்.
ஊழல்கள் மீது நடவடிக்கை
கொரோனா காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்தோம். திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஆளுங்கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். துணை முதலமைச்சர் இரவில் ஆட்டம் போட்டு பகலில் தூக்கம் போடுகிறார். இன்ஸ்டாகிராமில் உதயநிதி நள்ளிரவு ஒரு பதிவுக்கு லைக் போடுகிறார். இப்படிப்பட்ட துணை முதலமைச்சர் நாட்டிற்கு தேவையா.
திமுக அரசு கடன் மேல் கடன் வாங்கி, மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துகிறார்கள். மக்களை கடன்காரர்கள் ஆக்கிவிட்டனர். ஸ்டாலின் கூவி கூவி அழைக்கிறார். ஆனால் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. கருணாநிதி உடல்நலம் குன்றியபோது கூட ஸ்டாலினுக்கு பதவி வழங்கவில்லை. ஊழலுக்கு பேர் போனது திமுக. திமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றை நாங்கள் வெளி கொண்டு வருவோம். ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
மனித உறுப்புகள் திருட்டு
திமுக ஆட்சியில் மனித உறுப்புகளை கூட திருடுகிறார்கள். திமுக நிர்வாகிகள் மருத்துவனைக்கு சென்றிருந்தால் உடலில் உறுப்புகள் இருக்கினறனவா என்பதை பரிசோதனை செய்து பார்த்து கொள்ளுங்கள். இந்த ஆட்சியில் டின்பிஎஸ்சி தேர்வை கூட சரியாக நடத்தவில்லை" என்றவர், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
-
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications