ஜவுளி ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு.. கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றி வந்ததால் அதிரடி ஆக்ஷன்!
ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய தனியார் தொழிற்சாலைக்கு மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுநீர் இஷ்டத்திற்கு வெளியேற்றப்படுவதாக கடந்த சில மாதங்களாக அதிகளவில் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் ஜவுளி நிறுவனம், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து கடந்த 16ஆம் தேதியன்று, சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் 2 நாட்கள் அங்கு ஆய்வு நடத்தி, கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதை உறுதி செய்தனர்.
பாயிண்ட் டெக்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் சட்ட விரோதமாக கழிவு நீரை சுத்திகரிக்காமல் பக்கவாட்டு சுவர் வழியே வெளியேற்றியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த ஜவுளி ஆலைக்கு மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் விதிமுறைகளை மீறிய புகாரில், 8வது ஆலை மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications