ஈரோட்டில் ஆசை ஆசையாய் வாங்கிய பைக்.. 2 தவணை கட்டாததால் பறித்த வங்கி.. கண்ணீர் விட்டு அழுத இளைஞர்
ஈரோடு: ஈரோட்டில் ஆசை ஆசையாய் வாங்கிய இருசக்கர வாகனத்தை விட்டு பிரிய மனமில்லாமல் ஈரோடு இளைஞர் கதறி அழுத வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. 2 தவணை கட்டாததால் பைக்கை வங்கி ஊழியர்கள் எடுத்து சென்றுவிட்டதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
ஈரோட்டில் இளைஞர் ஒருவருக்கு இரு சக்கர வாகனத்தை அவரது குடும்பத்தினர் ஆசைப்பட்டார் என்று தவணை முறையில் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் ஐந்தாயிரம் ரூபாய் முன்பணம் கட்டி எடுத்த வண்டிக்கு அதன்பிறகு இரண்டு தவணை தொடர்ந்து கட்டாததால் , அந்த இருசக்கர வாகனத்தை தனியார் வங்கி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். இதை பார்த்து கதறி அழுத இளைஞர் வங்கி முன்பு அமர்ந்த எவ்வளவோ மன்றாடி கேட்டும் வங்கி ஊழியர்கள் திரும்ப தரவில்லை.. விதிமுறைகளின் படியே வாகனம் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளதாக விளக்கம் அளித்தனர்.

இதனிடையே மகனின் அழுகையை பார்த்த பெற்றோர், இரு தவணையில் ஒரு தவணை தொகையை செலுத்திவிடுவதாகவும், வாகனத்தை திரும்ப தருமாறும் கேட்டுள்ளனர். அதற்கும் வங்கி ஊழியர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மகன் , இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதால் ஏக்கத்தில் அழுவதாக அவரது தாயார் வங்கி முன்பு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
இதுபற்றி அந்த இளைஞரின் தாயார் அளித்த பேட்டியில், என் அம்மா, பையன் வண்டி கேட்கிறானே என்று ஆசைப்பட்டு எடுத்துக் கொடுத்துவிட்டார்கள்.. வண்டிக்கு 5000 ரூபாய் முன்பணம் கட்டியாச்சு.. ஒரு தவணை கட்டியாச்சு.. அதற்கு அப்புறம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கட்ட முடியவில்லை என்று சொன்னோம். எங்கள் வீட்டுக்கு இரண்டு பேர் வந்தார்கள். பணத்தை கட்ட சொல்லி மிரட்டினார்கள்.. காலையில் இருந்து மதியம் வரை மிரட்டினார்கள்.. நான் அவர்களிடம் 30ம் தேதி ஒரு தவணை கட்டிவிடுகிறேன் என்று சொன்னேன்.. அப்போது அவர்கள் வண்டியை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
நான் அவர்களிடம் ஒரு தவணை கட்டிவிட்டு வண்டியை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அதன்படியே வந்து ஒரு தவணை கட்ட முயற்சித்தேன் . ஆனால் அவர்கள் இரண்டு தவணையும் கட்டினால் தான் வாகனத்தை தருவோம் என்று மறுத்துவிட்டார்கள். நான் அவர்களிடம் என் மகன் உடல்நிலை சரியல்லாமல் இருக்கிறான்.. கொஞ்சம் மனம் இறங்கி உதவி செய்யுங்கள் என்று தனியார் வங்கி ஊழியர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் அதெல்லாம் பண்ண முடியாதும்மா என்று கூறிவிட்டார்கள். நான் ஏற்கனவே சலுகை கொடுத்துவிட்டேன் இனியும் சலுகை கொடுக்க முடியாது என்று கூறினார்கள்..
சரி இரண்டு தவணையும் கட்டுகிறேன் என் மகன் அழுகிறான் என்று வங்கியிடம் கேட்டோம். அவர்கள் இப்போது பணம் கட்ட முடியாது.. வங்கி நேரம் முடிந்துவிட்டது. வாகனத்தை பணத்தை கட்டாமல் தர முடியாது மறுக்கிறார்கள்" இவ்வாறு அந்த பெண் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர் , 18 வயசுக்கு கீழே இருக்கும் சிறுவனுக்கு நீங்க பைக் வாங்கி கொடுத்ததே முதல்ல தப்பு இதுல EMI கட்டவும் மாட்டீங்க உங்க மேல பரிதாபமும் படனுமா என்னம்மா நியாயம் என்றும் நியமா இது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். நியமா இது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கடன வாங்குனா திரும்ப கட்டணும். இப்படி ஆளாளுக்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கடனை கட்டாமல் விட்டால் வங்கியை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான். இந்த குறைந்த முன்பணம்ற வழிமுறையை முதல்ல நிறுத்தணும். 25% - 50% முன்பணம்னு சொன்னா இந்தப் பிரச்சணையே இருக்காது என்று கூறியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications