மீதி சில்லறை கேட்ட முதியவரை கடுமையாக தாக்கிய ஈரோடு பஸ் கன்டக்டர் சஸ்பெண்ட்!.. பதைபதைக்கும் வீடியோ!
ஈரோடு: அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு கொடுக்கும்போது ஏற்பட்ட தகராறில் நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Recommended Video
அரசுப் பேருந்தில் பயணித்த முதியவரிடம் பயணச்சீட்டு கொடுக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்து நடத்துனர், முதியவரை தாக்கும் வீடியோ காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து புகாரின் பேரில் விசாரணை நடத்தி தவறு இருப்பின் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோட்டிற்கு தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

வாய் தகராறு
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் பேருந்து நடத்துநர் குமாரிடம் பயணச் சீட்டு வாங்கும்போது சில்லரை கொடுப்பதில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதியவர்
அப்போது நடத்துனர் முதியவரை ஆத்திரத்துடன் தாக்கியுள்ளார். இந்த காட்சியை பேருந்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். மேலும் காசை வீசி எறிந்து பேருந்தை விட்டு கீழே இறங்குமாறும் அந்த நடத்துவர் கோபத்துடன் கூறுகிறார்.

சமூகவலைதளங்கள்
வயதில் பெரியவர் என்றும் பாராமல் முதியவரை நடத்துநர் ஒருமையில் பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து பொதுமக்களும் அந்த நடத்துநரை சமாதானம் செய்து பெரியவரை அவ்வாறு பேச வேண்டாம் என அறிவுறுத்தினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடத்துநர் சஸ்பென்ட்
இந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்பவம் குறித்து விசாரித்து தவறு இருப்பின் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நடத்துநர் குமாரை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications