ஈரோடு கிழக்கு.. எடப்பாடி வந்ததும் பற்றி எரிந்த தென்னை மரம்.. பதறிய தொண்டர்கள்.. என்ன நடந்தது
எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தைத் தொடங்கினார். முதல் நாளே தென்னை மரம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.. வாக்குப்பதிவுக்கு இன்னும் கொஞ்சக் காலமே இருக்கும் நிலையில், பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வென்று ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சி தர வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார். இதன் காரணமாகவே வலிமையான தென்னரசுவை வேட்பாளராக நியமித்துள்ளார்.

அதிமுக
மேலும், அனுபவம் வாய்ந்த தலைவரான செங்கோட்டையன் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் தரப்பு தனியாகப் பிரிந்துள்ள நிலையில், முதலில் வேட்பாளர் அறிவிப்பில் சற்றே குழப்பம் நிலவியது. இருப்பினும், இப்போது அனைத்து குழப்பங்களும் தீர்ந்துள்ள நிலையில், அதிமுகவினர் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பெண்களுக்கான உரிமை தொகை வாக்குறுதி, சிலருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படுவதை முன்னிறுத்தி அதிமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரசாரம்
இதற்குக் களத்தில் நல்ல வரவேற்பு கிடைப்பதாகவே கூறப்படுகிறது. மேலும், தேர்தலில் திமுக பல தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. ஏற்கனவே, அதிமுக மூத்த அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார். இரட்டை இலை சினத்திற்காக அவர் ஈரோடு கிழக்கில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எடப்பாடி பழனிசாமி
அப்போது நடந்த ஒரு சம்பவம் தான் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் பெரியார் நகர் பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அங்கு அவரை வரவேற்க அதிமுகவினர் பட்டாசுகளை வைத்தனர். அங்கு வான வேடிக்கை எல்லாம் வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ராக்கெட் ஒன்று அருகே இருந்த தென்னை மரத்தில் பாய்ந்தது.

தீப்பற்றி எரிந்த தென்னை மரம்
இதில் அங்கிருந்த தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மரத்தின் உச்சியில் ராக்கெட் பாய்ந்ததில், அது தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்துப் பதறிய அக்கம் பக்கத்தினர், இது குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், அப்போதும் தீயணைப்புத் துறையினர் வரும் வழியிலும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தது. இதனால் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின் போது திடீரென இப்படி தென்னை மரம் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சிக்கு ஆபத்து வருமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இதன் காரணமாகவே இதுவரை எட்டிப் பார்க்காத திமுக அமைச்சர்கள் கூட இப்போது ஈரோடு கிழக்கிற்கு வந்துள்ளனர். ஆனாலும், மக்கள் இதை கண்டு எல்லாம் ஏமாற மாட்டார்கள்.

சரமாரி கேள்வி
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பொறுப்பிற்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது. இதுவரை பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட உரிமை தொகை வழங்கப்படவில்லை.. மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு நினைவு மண்டபம் எல்லாம் கட்டுகிறார்கள்.. இதற்கு அவர்களுக்குக் காசு இருக்கிறது. ஆனால், சுமார் 7.5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை நிறுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் நிச்சயம் மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
-
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications