ஈரோட்டில் சாணியடி திருவிழா கோலாகலம்.. கொட்டகையில் மாட்டு சாணத்தை உருண்டையாக்கி.. பரவசத்தில் பக்தர்கள்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழாவின் வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்திலும் வெளியாகி பக்தர்களுக்கு பரவசத்தை தந்து வருகிறது. ஊர்தெய்வமான பீரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள், வழிபாடுகள் நடத்தப்பட்டு, ஆண்கள் அனைவரும் வெற்று உடம்புடன் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகளை செய்திருக்கிறார்கள். பிறகு சாணத்தை உருண்டையாக்கி வீசி விளையாடியிருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம், தமிழக கர்நாடக எல்லையான தாளவாடி குமிட்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் ஆலயம் உள்ளது.. இங்குள்ள கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈரோடு திருவிழா - பக்தர்கள் பரவசம்
குமிட்டடாபுரம் என்ற கிராமம், காட்டுப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.. எனவே இந்த வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் விலங்குகள், பயிர்களை சேததப்படுத்தி விடுவதுண்டு, அதேபோல, விவசாயிகளின் கால்நடைகளையும் வேட்டையாடி விடும்..
இதனால் இந்த கிராம மக்கள் எந்நேரமும் அச்சத்திலேயும், கலக்கத்திலேயும் வாழும்படியான நிலைமை உள்ளது.. இது அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடுகிறது.
எனவேதான், வனவிலங்குகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள, பீரேஸ்வரர் அருள் வேண்டி வருடா வருடம் சாணியடி திருவிழாவை நடத்துகிறார்கள்.. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்த 3 வது நாளில் பீரேஸ்வரர் பிறந்தநாளாக சாணியடி திருவிழா கொண்டாடப்படுகிறது.
கொட்டகையில் பசுமாட்டு சாணம்
இதற்காகவே முன்கூட்டியே, கிராமத்தில் உள்ள மாட்டுக் கொட்டைகளில் இருந்து பசுஞ்சாணம் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைத்துவிடுவார்கள்..
சுவாமி வேடமிட்ட நபர் ஒருவரை கழுதை மீது உட்கார வைத்து ஊர் எல்லையில் உள்ள குளத்தில் இருந்து ஆரவாரத்துடன் கோயிலுக்கு அழைத்து வரப்படுவார்.. இதற்கு பிறகு பீரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்,.
பிறகு, கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி விழாவை துவங்கும்.. அப்போது சட்டை அணியாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை, குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்தை எடுத்து உருண்டையாக திரட்டி ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடினர். இதன்பெயர்தான் சாணியடி திருவிழா.. இறுதியாக ஊர்குளத்தில் அனைவருமே சேர்ந்து குளித்துவிட்டு, பீரேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கமாக உள்ளது.
உருண்டை சாணி வீசி கோலாகலம்
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான விழா, தீபாவளி முடிந்து 3வது நாளான நேற்று நடைபெற்றது.. சாணியால் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் இந்த வினோத திருவிழாவில் மட்டுமின்றி கர்நாடக மாநில பக்தர்களும் பங்கேற்றனர்.
இத்திருவிழா தொடங்குவதற்கு முன்பாக ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் சாமியை அமரவைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பிறகு, கிராமத்தில் உள்ள பசுமாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவிக்கப்பட்டிருந்த நிலையில், அவைகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருண்டையாக உருட்டி ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.
சாணியடி திருவிழா
அதன்படியே, இந்த ஆண்டுக்கான விழா, தீபாவளி முடிந்து 3வது நாளான நேற்று நடைபெற்றது.. சாணியால் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் இந்த வினோத திருவிழாவில் மட்டுமின்றி கர்நாடக மாநில பக்தர்களும் பங்கேற்றனர்.
இத்திருவிழா தொடங்குவதற்கு முன்பாக ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் சாமியை அமரவைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பிறகு, கிராமத்தில் உள்ள அனைத்து பசு மாட்டு சாணங்களும் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவிக்கப்பட்டிருந்த நிலையில், அவைகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருண்டையாக உருட்டி ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.
பயிர்களுக்கு உரம் - சாணம்
இந்த சாணியடி திருவிழாவில், பக்தர்கள் வீசியெறிந்து விளையாடிய சாணத்தை கிராம மக்கள் எடுத்துச் சென்று விவசாய நிலங்களில் உரமாக போடுகிறார்கள்.. இதனால் பயிர்களில் நோய் தாக்காது பயிர் நன்றாக வளரும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே நேற்றைய சாணியடி திருவிழாவுக்கு பிறகும், விவசாயிகள் அதனை தங்கள் நிலத்தில் தூவுவதற்காக கையோடு எடுத்து சென்றார்கள்.
அதுமட்டுமல்ல, இந்த திருவிழாவின்போது சாணத்தை உடலில் பூசுவதன் மூலம் நோய்களும் தீரும் என்பதும் அம்மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications