ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவராக உள்ளவர் சி கதிவரன் ஐஏஎஸ். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்,. முதுகலை வேளாண்மை பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை கலெக்டராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார்.
பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவனுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணி, சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் சீதாலட்சுமி, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவர் அர்ஜூன் சர்மா உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications