ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.. கலெக்டர் தகவல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனினும் இடையில் பொங்கல் விடுமுறை நாட்கள் இருப்பதால் மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுங்ரா அளித்த பேட்டியை பார்க்கலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8 ஆம் தேதி நடைபெறுகிறது.

erode east by election 2025 congress election commission 2024

தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது . வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் திரும்ப பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ஈரோடு முழுவதும் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலுருமான ராஜகோபால் சுங்ரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- அரசு விடுமுறை நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது.

10 ஆம் தேதி, 13 ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதி ஆகிய நாட்களில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். 17 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் விதிகளின் படி அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+