72889 ஓட்டு எங்கே? ஈரோட்டில் "எடைத்தேர்தல்".. இடைத்தேர்தல் ரிசல்ட்டை விடுங்க.. "இதை" கவனிச்சீங்களா?
ஈரோடு: இடைத்தேர்தல் என்றாலே அரசை எடை போடும் தேர்தல் என்பார்கள்.. அதேபோல, தங்களுக்கான ஆதாயங்களை மக்கள் எடை போடும் தேர்தல் என்றும் சொல்வார்கள். ஆனால், இந்த முறை ஈரோட்டில் வாக்குசதவீதம் குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என் விவாதங்கள் எழ துவங்கியிருக்கின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நேருக்கு நேர் மோதின.. அந்தவகையில், நாம் தமிழர் கட்சி மட்டும், திமுகவுடன் போட்டியிட்டது.

அவதூறு: "திமுக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன" என்று எழுதியிருந்தார்
ஆனால், பல கட்சிகள், தாங்கள் போட்டியிடாததற்கு, சாதி அடிப்படையிலான போட்டியாகவே இது பார்க்கப்பட்டதாக கூறியிருந்தன.. திமுகவின் சந்திரகுமார் முதலியார் சமூகத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கவுண்டர் சமூகத்தையும் பிரதிநிதிப்படுத்துவப்படுத்துவதாகவும், இதன் விளைவாகவே தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறியிருந்தன.
இடைத்தேர்தல்: இந்நிலையில், திமுக , நாம் தமிழர் கட்சி கடுமையான பிரச்சாரத்தை முன்னிறுத்தி இருந்தன. வழக்கமாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறும் என்றாலும், இந்த ஈரோடு இடைத்தேர்தலில் எத்தனை சதவீதத்தை திமுக பெறுகிறது என்பதுதான் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அதேபோல, திமுக அதிக சதவீதத்தில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே, நாம் தமிழர் மும்முரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டது.
இறுதியில், கடந்த இடைதேர்தலில் 75 சதவீதம் இருந்த வாக்குப்பதிவு, இந்த முறை 68 சதவீதமாக குறைந்துள்ளது.. அதாவது 7 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்திருப்பதற்கான காரணத்தையும் ஆராய வேண்டியிருக்கிறது.
வாக்களிக்கவில்லை: அதேபோல, இங்கு இன்னொன்றையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் 67.9% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இதற்கு காரணம், கடந்த 4 வருடங்களில் மட்டும் இங்கு 2வது இடைத்தேர்தல் நடந்துள்ளது.. இரண்டாவது இடைத்தேர்தல் என்பதால், வாக்காளர்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டவில்லையாம். அதனால்தான், 154657 பேர் வாக்களித்திருந்தனர்.. 72889 பேர் வாக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆக, பாஜக, அதிமுக, பாமக, தவெக போடடியிடாத சூழலில், இந்த வாக்குகள் என்னாகும்? யாருக்கு சென்றிருக்கிறது? என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், 72889 பேரின் வாக்குகள், பதிவாகாத காரணத்தை லேசில் கடந்து போக முடியாது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications