ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 246 பேர் தபால் வாக்களித்தனர்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல் கட்டமாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 246 பேர் இதுவரை தபால் வாக்களித்தனர். இத்தொகுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கிய தபால் வாக்குப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் திமுக வேட்பாளராக விசி சந்திரகுமார் போட்டியிடுகிறார். அவருக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி களம் காண்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக vs நாம் தமிழர் கட்சி என நேரடி மோதல் நிலவுகிறது. தேர்தலைப் புறக்கணித்த அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா? அல்லது நோட்டாவுக்கு செலுத்தப்படுமா? என்பது எதிர்பார்ப்பு.
மேலும் தந்தை பெரியாரை மிக இழிவாகவும் ஆபாசமாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 2,529 பேர் உள்ளனர்; மாற்றுத் திறனாளிகள் 1,570 பேர் உள்ளனர். இந்த வாக்காளர்களில் 256 முன்கூட்டியே தபால் வாக்குகளைச் செலுத்த விண்ணப்பித்திருந்தனர்.
இதனையடுத்து முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணி கடந்த 23-ந் தேதி தொடங்கியது. தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அடையாள அட்டைகளை சரிபார்த்து மறைவிடம் ஒன்றில் வாக்குச் சீட்டில் வாக்குகளைப் பெற்றனர் தேர்தல் அதிகாரிகள். இந்த தபால் வாக்குகளைப் பெறும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் கொடுத்த 256 பேரில் மொத்தம் 246 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தபால் வாக்குகள் சீலிடப்பட்ட உறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது இந்த வாக்குகளும் எண்ணப்படும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications