ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்- 46 வேட்பாளர்கள் போட்டி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் களம் காண்கின்றனர். இத்தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த வெளிமாநிலத்தவர் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. விசி சந்திரகுமார் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளது. அதேபோல பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 8 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 47 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர்.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications