சேம் சைடு கோல் போடுறாரே..! “எய்ம்ஸ் எங்கே?” பாஜக அலுவலகத்தில் தென்னரசு பேச்சால் ஷாக் ஆன பாஜகவினர்!
பாஜக அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பேசிய விஷயம் பாஜக நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
ஈரோடு : பாஜக அலுவலகத்திற்கு ஆதரவு கேட்டுச் சென்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசு, திமுக அரசை விமர்சித்துப் பேசும்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை, நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்றெல்லாம் பேசியது அங்கிருந்த பாஜக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கலின்போதும் பாஜகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மேலும், பாஜக கொடி, பாஜக தலைவர்களின் படங்கள் ஆகியவற்றை அதிமுக தேர்தல் பணிமனையிலும் பிரச்சாரத்திலும் அதிமுக தவிர்த்து வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜக அலுவலகத்திற்குச் சென்ற அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் பேச்சு பாஜக நிர்வாகிகளையே திகைக்க வைத்துள்ளது.

அதிமுக வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஈபிஎஸ் அணியும் ஓபிஎஸ் அணியும் வேட்பாளர்களை களம் இறக்கியதால், தேர்தல் களம் பரபரத்தது. இதற்கிடையே, இரட்டை இலை கேட்டு எடப்பாடி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனுவை தாக்க செய்ய, பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி ஏற்கனவே அறிவித்த தென்னரசுவை எடப்பாடி அணி வேட்பாளராக்கியது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து கேட்டதில் அவைத்தலைவர் விதிமீறல் செய்ததாக ஓபிஎஸ் அணி குற்றம்சாட்டினாலும், தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது. இதனால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைத்தது.

பாஜக மிஸ்ஸிங்
இதையடுத்து, அதிமுக வேட்பாளராக தென்னரசு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். தென்னரசுவை ஆதரிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார். ஆனாலும், வேட்பு மனு தாக்கலின்போது பாஜக நிர்வாகிகளை அதிமுகவினர் அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பாஜக தலைவர்களைச் சந்தித்து எடப்பாடி தரப்பினரும், ஓபிஎஸ் தரப்பினரும் மாறி மாறி ஆதரவு கேட்ட நிலையில், ஈபிஎஸ் அணி வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது பாஜகவினர் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது.

புறக்கணிப்பு?
ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி அணி அமைத்த அதிமுக தேர்தல் பணிமனையில், முதல் நாளிலேயே கூட்டணிக்கு பெயர் சூட்டுவதில் குழப்பம் ஏற்பட்டு அடுத்தடுத்து 3 முறை பேனர் மாற்றப்பட்டது. எடப்பாடி அணியின் தேர்தல் பணிமனையில் பாஜக கொடியோ சின்னமோ அக்கட்சி தலைவர்களின் புகைப்படங்களோ இடம்பெறவில்லை. அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக அண்ணாமலை அறிவித்த போதிலும் பாஜகவை அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணித்து வந்தது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

பாஜக அலுவலகத்தில் ஆதரவு
இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, ஈரோடு பச்சப்பாலி பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரவு திரட்டினார். அப்போது அவரை ஈரோடு மாவட்ட பாஜக தலைவர் வேதாநந்தம் மற்றும் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர், பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு உரையாற்றினார்.

ஷாக் ஆன பாஜகவினர்
மேலும், இந்த ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றனர் ஆனால் நீட் தேர்வை நிறுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையையும் கொண்டு வரவில்லை என விமர்சித்தார் தென்னரசு. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்காததால் காலதாமதம் ஆவதை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில், பாஜக அலுவலகத்தில் இருந்துகொண்டே, எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி தென்னரசு பேசியதால், அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் ஷாக் ஆகியுள்ளனர்.
-
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?












Click it and Unblock the Notifications