சிக்ஸர்? கிளீன்போல்டு? வளைத்து வளைத்து திமுகவுக்கு ஓட்டு! அப்ப ஈரோடு ரிசல்ட் சொல்வதென்ன? யோசிக்கணும்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றியின் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளார். திமுகவுக்கே வெற்றி கிடைக்கும் என்று எதிர்ப்ரக்கப்பட்டு வரும்நிலையில், இந்த வெற்றியானது, தமிழக அரசியல் களத்தில் ஏதாவது மாற்றத்தை உண்டுபண்ணுமா? தாக்கத்தை ஏற்படுத்துமா? வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருத முடியுமா?

"திமுக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன" என்று எழுதியிருந்தார்

erode east by election vote count

சாதி வேட்பாளர்கள்: எனினும், முதலியார் சமூகத்தை சேர்ந்த சந்திரகுமார் திமுகவின் வேட்பாளராகவும், கவுண்டர் சமூகத்தை சேர்ந்த சீதாலட்சுமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராகவும் களமிறங்கினார்கள். அதன் முடிவுகள்தான் இன்று வெளியாகி கொண்டிருக்கிறது.

எந்தவொரு இடைத்தேர்தலும், வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும்.. ஆனால் , இந்த ஈரோட்டு தேர்தலை அப்படி கருத முடியாது.. காரணம், இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைவாகவே பதிவாகியிருந்தது.. கடந்த இடைதேர்தலில் 75 சதவீதம் இருந்த வாக்குப்பதிவு, இந்த முறை 68 சதவீதமாக, அதாவது 7 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது. அந்தவகையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள், பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.

வாக்காளர்கள்: அதேபோல, 67.9% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இதற்கு காரணம், இரண்டாவது இடைத்தேர்தல் என்பதால், வாக்காளர்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.154657 பேர் வாக்களித்து, 72889 பேர் வாக்களிக்கவில்லை.. இது புறக்கணிப்பா? சோர்வா? அதிருப்தியா? என்று தெரியாதபட்சத்தில், இந்த இடைதேர்தல எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.

அதேபோல, அதிமுக, பாஜக, தவெகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டிருந்தால், தேர்தல் களமே பொறி பறந்திருக்கும்.. அனைவரும் ஒன்றிணைந்து ஆளுங்கட்சிக்கு செக் வைத்திருக்க முடியும்.. இதன்மூலம் வாக்கு சதவீதத்தையும் குறைத்திருக்கலாம். களத்தில் பணப்புழக்கமும் அதிகமாக இருந்திருக்கும்.. ஆனால், இவை எதுவுமே இல்லாமல் மொத்த எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் பின்வாங்கிவிட்டன. தேர்தலில் போட்டியிடாதபோதே, அதற்கான வீர்யமும் களத்தில் குறைந்துவிடுகிறது. அந்தவகையில், இந்த தேர்தல் முடிவுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது

எதிர்க்கட்சிகள்: இதையே வேறுமாதிரியாக யோசிக்கிறார்கள்.. அதாவது, திமுகவை தோலுரித்துக்காட்டவே, ஒட்டுமொத்தமாக எதிர்கட்சிகள் அனைவரும் சேர்ந்து எடுத்த உத்திதான், இந்த தேர்தல் புறக்கணிப்பு என்கிறார்கள்.. மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்த , இந்த இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

ஆளுங்கட்சி இங்கே வெற்றி பெற்றுவிடும் என்பதால்தான், எந்த அமைச்சர்களும் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யவில்லை.. மாவட்ட அமைச்சரான முத்துசாமி மட்டுமே தொகுதிக்குள் சுழண்டு கொண்டிருந்தார்.. முதல்வர், துணை முதல்வர், மூத்த அமைச்சர்களின் பிரச்சாரம் இல்லாமலேயே ஒரு இடைதேர்தல் நடந்து முடிந்திருக்கும்போது, இது எந்தவிதமான தாக்கத்தையும் களத்தில் ஏற்படுத்தப்போவதில்லை.

அளவுகோல்: எனவே, இந்த தேர்தல் வெற்றியை, சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்றோ? திமுகவின் செல்வாக்கு உயர்ந்துவிட்டது? எதிர்க்கட்சிகளின் மீதான அதிருப்தி கூடிவிட்டது? பெரியார் மீதான கிரேஸ் கூடிவிட்டதா? குறைந்துவிட்டதா? என்பதற்கான எந்த அளவுகோல்களையும் வைக்க முடியாது.

யாருமே போட்டியிடாத தேர்தலை வைத்து, எந்தவிதமான அளவுகோலையும், வரையறுக்கவோ, நிர்ணயிக்கவோ முடியாது... வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும், எந்தவிதமான தாக்கத்தையும் இந்த ஈரோடு தேர்தல் ரிசல்ட் ஏற்படுத்தாது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+