ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... டாஸ்மாக் கடைகளுக்கு பிப்.27 வரை லீவு...மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று முதல் பிப் 27 வரை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று முதல் பிப் 27 வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் இயங்காது எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக சாய்வு தளம், அவர்களுக்கு வீல் சேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஈரோட்டில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. வெயிலின் தாக்கம் இடைத்தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்கள் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களை சுற்றி அரசியல் கட்சியினருக்கு தடைவிதித்து 200 மீட்டர் தொலைவில் கோடு போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பகுதிக்குள் வெளி நபர்கள் வரக்கூடாது என்பதற்காக கோடு போடப்பட்டு வருகிறது. 33 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது. இதேபோல் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் வீடியோ மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. இது தவிர நுண்பார்வையாளர்களும் வாக்குப்பதிவை கண்காணிக்கின்றனர்.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று முதல் பிப் 27 வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் இயங்காது. விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications