ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு நிறைவு..காலை முதல் மாலை வரை விறுவிறு - 5 மணி வரை 70.58% பேர் வாக்களிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
ஈரோடு: இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
2021ல் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த வேளையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் ங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.
இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இந்நிலையில் தான் திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதனால் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 27 ல் தேர்தல் நடக்கும் என தேதி குறிக்கப்பட்டது.

களமாடும் 77 வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் மேனகா உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

துவங்கிய ஓட்டுப்பதிவு
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் கூறியபடி இன்று ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மக்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களிக்க தொடங்கினர். மாலை 6 மணி வரை மக்கள் ஓட்டு போடலாம். மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் காத்திருந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

238 வாக்குச்சாவடிகள்
பொதுமக்கள் வாக்கு செலுத்த வசதியாக 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்குப் பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடி மையங்களில் சாய்தளம், குடிநீர், சாமியானா பந்தல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர். அதன்படி, 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்கள், மூன்று நிலைகளிலான 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2.27 லட்சம் வாக்காளர்கள்
தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் ஆண்களாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாகவும் உள்ளனர். இதன்மூலம் தொகுதியில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு மொத்தம் 5 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் ஒரு கட்டுப்பாட்டு கருவி(கன்ட்ரோல் யூனிட்) மற்றும் ஒரு விவிபேட்(வாக்களித்ததை உறுதி செய்வது) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 1,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

துணை ராணுவ பாதுகாப்பு
அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 32 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக களமிறக்கப்பட உள்ளனர். வாக்காளர்களுக்கு இன்று பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க ஏற்பாடுகள் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.

ஆளும் கட்சிக்கான மதிப்பெண்ணாக..
2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு இந்த தேர்தல் என்பது ஆளும் திமுகவுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் களத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இருந்தாலும் அவருக்காக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வீதிவீதியாக பிரசாரம் செய்ய தொடங்கினர். நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பிரசாரம் செய்தனர். தேமுதிக ஆனந்துக்கு ஆதரவாக விஜயகாந்த் மனைவி பிரேமலாதா, அவரது சகோதரர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

ரூ.62 லட்சம் பொருட்கள் பறிமுதல்
முன்னதாக பிரசாரத்தின்போது திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்கள் ஏற்பட்டு நிர்வாகிகளின் மண்டைகள் உடைக்கப்பட்டன. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் முனைப்பில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு லஞ்சமாக பணம், பிரியாணி, வெள்ளி கொலுசு, குக்கர் உள்ளிட்ட பலவற்றை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணம், பொருட்கள் என ரூ.62 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசல்ட் எப்போது?
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அதன்பிறகு மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 2ம் தேதி மதியம் 3 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவு என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடதக்தகது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications