அடிதூள்.. ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி.. அதிமுக தோல்வி!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்றது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தம் 74.79 சதவீத ஓட்டுக்கள் பதிவான நிலையில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 ஓட்டுகள் பெற்று 66,575 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசை வீழ்த்தினார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3வது இடம் பிடித்த நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 4 வது இடத்தை பிடித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதனால் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

77 வேட்பாளர்கள் போட்டி
காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்களாக களமிறங்கினர். 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இதனால் ஆளும் திமுகவுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

தீவிர பிரசாரம்
இதனால் களத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இருந்தாலும் அவருக்காக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வீதிவீதியாக பிரசாரம் செய்ய தொடங்கினர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பிரசாரம் செய்தனர். தேமுதிக ஆனந்துக்கு ஆதரவாக விஜயகாந்த் மனைவி பிரேமலாதா, அவரது சகோதரர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

74.79 சதவீத ஓட்டுகள் பதிவு
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் கூறியபடி கடந்த 27 ம் தேதி ஈரோடு கிழக்கில் ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. 52 இடங்களில் 238 வாக்குசாவடிகளில் பொதுமக்கள் அமைதியாக ஓட்டளித்தனர். தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இருந்த நிலையில் மொத்தம் 74.79 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஓட்டுப்பதிவு முடிவடைந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

காங்கிரஸ் முன்னிலை
முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 397 தபால் ஓட்டுக்கள் பதிவான நிலையில் அதனை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி அரைமணி நேரம் நடக்க உள்ளது. இந்நிலையில் தான் தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார். தபால் ஓட்டு பதிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இரண்டாம் இடம் பிடித்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி
இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணும் பணியும் துவங்கியது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்று வந்தார். ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43, 981 வாக்குகளுடன் பின்தங்கி தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் டெபாசிட் தொகையை தக்க வைத்தார். இந்த தேர்தலில் 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் மேனகா உள்ளார். மேனகா 10,804 வாக்குகள் பெற்றார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகள் பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications