ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோற்றது பணநாயகம் வென்றது.. தென்னரசு கோபம்
பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது என்று அதிமுக வேட்பாளர் தென்னரசு கூறியுள்ளார்.
ஈரோடு: அதிமுக வேட்பாளரை விட 47 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதனையடுத்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு கோபமாக வெளியேறினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது" என்று கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

10 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 76,834 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 28637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தார்.
5 சுற்றுகள் முடிந்த போதே அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு கோபமாக வெளியேறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றுள்ளது என்று குற்றம் சாட்டினார். அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை என்றும் தென்னரசு கூறி விட்டு சென்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், நீங்கள் தோற்றுவிடுவீர்கள் என்று முன்பே தெரியும் என்று கூறினார். தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் வாக்களித்து விட்டு வந்த தென்னரசு, தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாக கூறினார். இன்றைக்கு ஏன் இப்படி மாற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications