மொடக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளரின் பர்னிச்சர் கடையில் ரூ 10 லட்சம் பறிமுதல்! பறக்கும் படை அதிரடி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே அதிமுக ஒன்றிய செயலாளருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. சட்டசபைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொடக்குறிச்சி தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில் நாதனும், பாஜக சார்பில் கிருத்திகா சிவக்குமாரும், தவெக சார்பில் சண்முகமும், நாம் தமிழர் சார்பில் அருணும் போட்டியிடுகிறார்கள். இதில் கிருத்திகா, சிட்டிங் பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகளாவார்.

இந்நிலையில் மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வராஜுக்கு சொந்தமான பர்னிச்சர் கடை, விளக்கியத்தி அருகே செயல்பட்டு வருகிறது. இந்தப் பர்னிச்சர் கடையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் பர்னிச்சர் கடையில் சோதனை செய்தனர்.

இதில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்ட பணமா? அல்லது தொழில் சம்பந்தமாக வைக்கப்பட்டிருந்த பணமா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications