ஈரோடு வந்தீங்களே, இங்க இருக்க கரூர் போக மாட்டீங்களா? தவெக விஜய் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் போஸ்டர்ஸ்
ஈரோடு: விஜய் காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார். இன்று ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நடந்து வருகிறது.. அரசியல் நிகழ்வில் இன்றைய கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.. இதையடுத்து, ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்புக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க போகிறது. இதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

கரூர் - கருப்பு சம்பவம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி அவர் நடத்திய பிரச்சாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த சம்பவம், விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது... தவெக வரலாற்றில் கருப்பு சம்பவமாகவே மாறிப்போனது..
விஜய் ரோடு ஷோ
இதற்கு பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்த பிறகு, விஜய் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை தொடரும் விதமாக திட்டமிட்டுள்ளார்.. ஏற்கனவே ரோடுஷோவில் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கேட்டு மறுக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் கூட்ட நிகழ்ச்சிகளை விஜய் நடத்தியிருந்தார்.
இன்று ஈரோடு மாவட்டத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.. மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதாலும், கரூர் சோக சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் நிகழ்ச்சி என்பதாலும் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.. மேலும், அரசியல் வட்டாரங்களின் கவனத்தையும் பெற்று வருகிறது..
அதேசமயம், நிறைய கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது.. கரூரில் கூட்டநெரிசல் அதிகரித்ததால், மூங்கில்பாளையத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை சுற்றி 4 புறங்களிலும் 50 அடி இடைவெளி வைக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஏகப்பட்ட கெடுபிடிகள்
நாமக்கல்லில் இருந்து கரூருக்கு செல்லும் வழியில் பல்வேறு வாகனங்கள் பரப்புரை வாகனத்தை பின்தொடருவதை கருத்தில் கொண்டு, இந்த முறை 10 வாகனங்கள் மட்டுமே பின்தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறையினர், ஈரோட்டின் பல இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று இரவில் இருந்தே பொதுக்கூட்ட மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காலையில் இருந்தே தவெக தொண்டர்கள், மக்கள் பொதுக்கூட்ட இடத்தில் குவிந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான், ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன..
ஈரோடு வரைக்கும் வந்தீங்களே
அதில், " ஈரோடு வரைக்கு வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டிங்களா??.... இங்க இருக்க கரூருக்கு போகல.. ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறிங்க?....'WHAT BRO IT'SVERY WRONG BRO' ஏன்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளன.
இன்னொரு போஸ்டரில் " விஜய் பரிதாபங்கள்... PRESENT .. "ஜனநாயகன் டப்பிங், ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா செல்வது, ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது"
ABSENT "மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது, மக்களை சந்திக்க கரூர் செல்வது, தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது" என்றெல்லாம் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன
அதேபோல மற்றொரு போஸ்டரில் "இங்க இருக்கிற கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லான்சுக்கு மலேசியா போறீங்க? வாட் ப்ரோ?" என்ற வாசகங்கள் பளிச்சிடுகின்றன..












Click it and Unblock the Notifications