மகனை சிகிச்சை அளிக்க விட்டுவிட்டு.. நர்ஸுகளுடன் நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போட்ட அரசு டாக்டர்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நோயாளிகளுக்கு மகன் சிகிச்சை அளிக்க சொல்லிவிட்டு நீச்சல் குளததில் அரசு மருத்துவர்கள் நர்ஸுகளுடன் லூட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கவுந்தப்படி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தினகர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்துவிட்டார்.
என்ன தான் நடக்கிறது தெலுங்கானாவில்? மிருகங்களான 5 பேர்.. அலறித்துடித்த சிறுமி! மூடி மறைத்த போலீசார்
2மேலும் தனக்கு பதிலாக தனது மகன் அஸ்வினை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தலைமை மருத்துவர்
தலைமை மருத்துவர் தினகர் மருத்துவமனையில் இல்லாமல் அங்குள்ள செவிலியர்களை அழைத்து கொண்டு நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போட்டு பொழுதை கழித்த புகைப்படம் வைரலானது. இதனால் அரசு மருத்துவர் சிக்கினார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் இப்படி நர்ஸுகளுடன் ஊர் சுற்றுவதா என்ற கேள்வி எழுந்தது.

நோயாளி
மருத்துவமனை தலைமையிடம் நோயாளி ஒருவரே இந்த புகைப்படத்தை காட்டி அரசு மருத்துவர் தினகர் செய்த காரியத்தை காட்டியுள்ளார். இதையடுத்து இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது தினகர் கூறுகையில் ஞாயிற்றுக்கிழமை எனக்கு விடுமுறை.

செவிலியர்களுடன் சுற்றுலா
அதனால் என்னுடன் பணிபுரியும் செவிலியர்களுடன் வெளியே சுற்றுலாவுக்கு சென்றேன் என தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் விடுப்பில் சென்றுவிட்டீர்கள், உங்கள் மகனை ஏன் சிகிச்சை அளிக்க வைத்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த மருத்துவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

விசாரணை
இந்த புகார் தொடர்பாக 4 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையை சுகாதாரத் துறை இயக்குநர் கோமதி நடத்தினார். அரசு மருத்துவமனையில் தனது மகன் அஸ்வினை தினகர் பணி செய்ய வைத்தது விசாரணையிலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளிலும் தெரியவந்தது.

விரிவான அறிக்கை
இதையடுத்து விரிவான அறிக்கை தயார் செய்து அதை மாநில மருத்துவ பணிகள் இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர் தினகரின் மகன் அஸ்வின் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த ஆண்டுதான் மருத்துவம் படித்து முடித்ததாக கூறப்படுகிறது.