NEET Coaching Camp: நீட் மறுதேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு.. சிறப்பு பயிற்சி முகாம்!
சென்னை: 'நீட்' மறுதேர்வை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சிறப்பு குறுகியகால பயிற்சி முகாமை நடத்த உள்ளது. ஏற்கனவே 'நீட்' தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுதேர்வை எதிர்கொள்ள மாணவர்களை மேலும் தயார்படுத்த இந்த புதிய பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அடுத்த மாதம் ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. மறு தேர்வை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறுகிய கால பயிற்சி முகாம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில், 38 மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.

நீட் தேர்வில் பங்கேற்க இருக்கும் வெற்றி பள்ளிகள் உட்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மாணவர்கள் 'நீட்' தேர்வுக்கு சிறப்பாக தயாராகும் வகையில் பாடவாரியான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் கட்டாயம் பள்ளிச் சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும், அவர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
