ஈரோடே ஈர்க்குதே.. ஹப்பாடா இனிமேல் நிம்மதி.. தமிழ்நாடு அரசு செய்த வசதியை பாருங்க.. பூரிக்கும் கோபி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் பயோமெட்ரிக்முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் நெல் அறுவடை தொடங்கியுள்ளதால், அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

ஈரோடு மாவட்டம்: அதாவது, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் நெல் பயிர் சாகுபடி செய்து, அறுவடைக்கு தயாராக உள்ளது... சில பகுதியில் மட்டுமே அறுவடை நடந்து வந்தது. இப்படி அறுவடை செய்யப்படும் நெல்லை, விவசாயிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் மையங்கள் மூலம் விற்பனை செய்யலாம்.
அதன்படி, A கிரேடு ரக நெல் குவிண்டால், 2,160 ரூபாய்க்கும், சாதாரண ரக நெல் குவிண்டால், 2,115 ரூபாய்க்குள் கொள்முதல் செய்யப்படும் என்றும், இந்த மையத்தில் நெல்லை விற்பனை செய்ய முன்பதிவு செய்ய வேண்டும், முன்பதிவுக்கு வரும்போது, VAO சான்றிதழ், நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், விவசாயியின் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 2 ஆகியவை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கொள்முதல் நிலையம்: இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், கூகலூர் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அந்தியூர் எம்எல்ஏ ஏஜி. வெங்கடாசலம் திறந்து வைத்தார்.. இதையடுத்து, அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் பயோமெட்ரிக்முறை ஈரோடு மாவட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க, எல்லாவிதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நெல் மூட்டைகள்: அதுமட்டுமல்லாமல், நெல் மூட்டைகள் தேங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, காலதாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் தேங்காமால் இருக்க கூடுதல் லாரிகளை இயக்க வேண்டும் என்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கூடுதலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயன்கள்: பயோமெட்ரிக் முறையினால் பயன்கள் என்னென்ன தெரியுமா? விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த பயோமெட்ரிக் கருவி பொருத்துகிறது.. இதில், விரல்ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லினை, கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்திட முடியும் .
பயோமெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் செல்போன் நம்பருக்கு OTP பெறுவதன் மூலமும், விவசாயிகளின் விபரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்...இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று கொள்முதல் நிலையங்களிலேயே சரி பார்த்துக்கொண்டு நெல்லினை விற்பனை செய்துகொள்ளலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications