ஆஹா.. அசத்தியது ஈரோடு.. கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது.. அனைவரும் குணம்!
ஈரோடு : ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்தனர். மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேர் குணமடைந்தனர். ஒருவர் மட்டும் மரணம் அடைந்தார். இதனால் இன்று ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கடைசியாக புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்தது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். கடந்த 22ம் தேதி 65 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். இதற்கிடையில் முதியவர் ஒருவர் மட்டும் உயிரிழந்தார்.
மீதமுள்ள 4 பேர் மட்டும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்கள். அதன்பின்னர் கடந்த 12 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதல் மாவட்டம் என்ற சாதனையை ஈரோடு படைத்துள்ளது.
தற்போது வரை கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா இல்லாத மாவட்டத்தின் வரிசையில் ஈரோடும் இணைந்துள்ளது. விரைவில் பல மாவட்டங்கள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சமீபகாலமாக இல்லை. குணம் அடைவோர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications