கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே 'உங்க அய்யாசாமி' தான் சார்.. போலீஸை அதிரவைத்த திருடர்கள்!
திருடர்களுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். வீடுகளில் கைவரிசை காட்டிய 3 பேர் சிக்கியிருக்கிறார்கள்.
ஈரோடு: திருடர்களுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுத்த போலீஸ்காரரை கைது செய்த போலீசார், அவரது ஆலோசனைப்படி வீடுகளில் கைவரிசை காட்டிய 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த 35 வயதாகும் ராஜீவ் காந்தி என்பவர், ஈரோடு ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அந்த பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த மளிகை கடை அருகே சந்தேகப்படும்படி சிலர் வந்து செல்வதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தார்கள்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறிய தகவல், போலீஸையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திருட்டு வழக்கு
பிடிப்பட்ட மூன்று பேரில் ஒருவரான செந்தில்குமார் கூறிய தகவல் தான் போலீசாரை அதிர வைத்ததது. விசாரணையில் வெளியான தகவலை பார்ப்போம். நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த செந்தில்குமார் (30) என்பவர் இவரை கடந்த 2021-ம் ஆண்டு பெருந்துறை பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

என்னை வந்து பார்
பின்னர் வழக்கு விசாரணைக்கு செந்தில்குமாரை பெருந்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அப்போது பாதுகாப்பிற்காக ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜீவ்காந்தி சென்றுள்ளார். அப்போது, அவர் செந்தில்குமாரிடம், "போலீசாரிடம் சிக்காமல் திருட்டுகளை நடத்துவது எப்படி? என்பதை நான் சொல்லித் தருகிறேன். நீ தண்டனை முடிந்து, என்னை வந்து பார்" என்று கூறினாராம்.

திருட்டுக்கு ஆலோசனை
அதன்படி கடந்த ஆண்டு, சிறை தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் போலீஸ்காரர் ராஜீவ்காந்தியை, பெருந்துறையில் உள்ள அவரது மளிகை கடையில் வைத்து சந்தித்தாராம். அப்போது செந்தில்குமாருடன், மதுரை மேலூரை சேர்ந்த கருப்புசாமி (31), பாலசுப்பிரமணி (42) ஆகியோரும் சென்றுள்ளார்கள். அவர்கள் 3 பேரிடமும் போலீஸ்காரர் ராஜீவ்காந்தி, கொள்ளையடிப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத வீடுகள் பற்றியும், அதிகம் போலீஸ் ரோந்து இல்லாத இடங்கள் குறித்தும் கூறியிருக்கிறார்

சிக்கிய ராஜீவ்காந்தி
அவரது ஆலோசனையின்படி பெருந்துறை, சித்தோடு உள்ளிட்ட இடங்களில் 3 பேரும் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தங்களுக்கு மூளையாக இருந்து, திருட்டுகளை எந்தெந்த இடத்தில் எப்படி நடத்துவது? என்று, தங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததே போலீஸ்காரர் ராஜீவ்காந்தி தான் என்று மூன்று திருடர்களும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ராஜீவ்காந்தி, செந்தில்குமார், கருப்புசாமி, பாலசுப்பிரமணி ஆகிய 4 பேரையும் கைது செய்தார்கள். போலீஸ்காரரே திருடுவதற்கு திட்டம் போட்டுக்கொடுத்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications