இரக்கமே இல்லையா? 3 மாத குழந்தைக்கு மூச்சுத்திணறல்.. பல கிமீ தூரம் ஆம்புல்ன்ஸ்க்கு வழிவிடாத கார்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக கோவை சென்ற ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் பல கிலோ மீட்டர் தூரம் கார் வேகமாக சென்றதாக புகார்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு, அவசர சிகிச்சைக்காக கோவை சென்ற ஆம்புலன்ஸுக்கு.வழி விடாமல், பல கிலோ மீட்டர் தூரம் கார் வேகமாக சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு 3 மாத குழந்தை சென்ற ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற கார் டிரைவர் மீது சத்தியமங்கலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பார்த்து பலரும் கொதித்து போய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கார் டிரைவர் செயலுக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரை டேக் செய்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கார் ஓட்டுநர்கள்
சாலையில் கார்களிலோ அல்லது இருசக்கர வாகனத்திலோ செல்லும் சிலர் தாங்கள் வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக வழிவிடாமல் செல்வர். அதேபோல் சில பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்களும் இப்படி செய்வதுண்டு. ஆனால் ஆம்புலன்ஸ் வரும் போது யாராக இருந்தாலும் தங்கள் வேகத்தை குறைத்து அதற்கு வழிவிடுவார்கள். சிலர் ஆம்புலன்சுக்கும் வழிவிடாமல் விரட்டியபடி சென்று சிக்கலில் சிக்குவதுண்டு. அப்படித்தான் ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடந்திருக்கிறது.

மூச்சுதிணறல்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ளது புங்கம்பள்ளி. இங்கு மூச்சுத் திணறலால் மூன்று மாத குழந்தை பாதிக்கப்பட்டது. குழந்தையை சிகிச்சைக்காக உடனே கோவை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதன்படி குழந்தையை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் திங்கள்கிழமை வேகமாக சென்று கொண்டிருந்தது.

கார் வழிவிடவில்லை
அப்போது புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள நல்லூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சைரன் ஒலித்தவாறு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது, ஆம்புலன்சுக்கு முன்னால் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இடது புறமாக செல்லாமல் நடுரோட்டிலும், ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் வேகமாக சென்றது. தொடா்ந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் கார் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

வைரலான வீடியோ
இதனால் காரை முந்தி செல்ல முடியாமல் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் தடுமாறியதாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற காரை ஓவர்டேக் செய்ய வழி இல்லாத நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் வாகன உதவியாளர் நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

நடவடிக்கை பாயும்
மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு சைரன் ஒலித்தவாறு சென்ற தனியார் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் போட்டி போட்டு ஓட்டி சென்ற கார் ஓட்டுநரின் செயலை பலரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஓட்டுநர் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை டேக் செய்து கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் இதர அவரசகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு கடந்த அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications