லஞ்சம்.. போலீசை பார்த்ததும் ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்க முயன்ற எஸ்ஐ.. ஈரோட்டில் கைது
ஈரோடு: ஈரோட்டில் விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்க முயன்ற பரபரப்பு சம்பவம் நடந்தது. மேலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். விபத்து வழக்கு ஒன்றில் அவரது வாகனத்தை(டூவீலர்) ஈரோடு ஜிஎச் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அதே போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க பிரகாஷ் கோரியதாக கூறப்படுகிறது.
அதற்கு சப் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுக்கும்படி கூறினார். இதையடுத்து இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் லஞ்சப்பணம் என்பது ரூ.7 ஆயிரம் குறைத்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பிரகாஷிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை முதலில் சப் -இன்ஸ்பெக்டர் செல்வகுமார் பெற்று கொண்டுள்ளார்.
அதோடு இன்னும் ரூ.5 ஆயிரத்தை கொண்டு வந்து கொடுத்தால் வாகனத்தை விடுவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க பிரகாஷ் விரும்பவில்லை. இதையடுத்து அவர் சம்பவம் தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் பினாப்தலின் எனும் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரகாஷிடம் கொடுத்தனர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி பிரகாஷ், சப் -இன்ஸ்பெக்டர் செல்வகுமாரிடம் பினாப்தலின் தடவிய ரூ.5 ஆயிரத்துக்கான ரசாயன ரூபாய் நோட்டுகளை வழங்கினார். இதை வாங்கி கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்தார். இதையடுத்து அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ய சென்றனர்.
அப்போது ஷாக்கான சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் லஞ்சப்பணத்தை தனது வாயில் போட்டு மெல்ல முயன்றார். இருப்பினும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications