தாசில்தார் நொந்துட்டாரு.. அரசு வேலைக்கு ரூ.2 கோடி? ஈரோடு பெருந்துறை துணை தாசில்தாரை சாய்த்த இளைஞர்
ஈரோடு: வேலை வாங்கி தருவதாக சொல்லி, அரசு அதிகாரியிடம் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.. சென்னையை சேர்ந்த இந்த இளைஞர் தற்போது கைதாகி ஜெயிலில் உள்ளார். என்ன நடந்தது ஈரோட்டில்?
பதிவுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாமல் போய் கொண்டிருப்பதாக புகார்கள் கிளம்பி வருகின்றன.. சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யவேண்டி, சார் - பதிவாளர் அலுவலகங்களை தேடி பொதுமக்கள் செல்ல நேரிடுகிறது. எனினும், சில சார் பதிவாளர்கள், தங்களை நாடி வரும் மக்களை தேவையின்றி அலைக்கழிப்பதாக புகார்கள் எழுகின்றன.

சலசலப்புகள்: சில இடங்களில் உடனடியாக பத்திரப்பதிவு செய்ய முடியாத நடைமுறை சிக்கல்களை சார் பதிவாளர்கள் சுட்டிக்காட்டினாலும், பொதுமக்கள் அதனை ஏற்பதில்லையாம். இதனால் பொது மக்களுக்கும், சார் - பதிவாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும், சண்டையும் வெடித்துவிடுகிறது.
நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளாகும் நிலைமை ஏற்படுவதாகவும், பெண்கள் உள்ளிட்ட பதிவு அலுவலர்களுக்கு, பாதுகாப்பற்ற சூழல் பணிகளில் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சம் தெரிவித்து வருகிறது.
அரசு வேலை: சில இடங்களில் அதிகாரிகளையே ஏமாற்றி பணம் பறித்துவிடும் சம்பவங்களும் நடந்துவிடுகின்றன.. நேற்றைய தினமும் ஈரோட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண் துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார் சென்னை இளைஞர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை திருவேங்கடம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தராம்பாள்.. 51 வயதாகிறது.. ஆப்பக்கூடலில் சர்க்கரை ஆலையில் வருவாய் துறை துணை தாசில்தாராக உள்ளார்.
போலீஸ் டிஎஸ்பி: இவருக்கு சென்னையை சேர்ந்த 37 வயது கலைவாணன் என்பவர், கடந்த 2022 மார்ச் மாதம் அறிமுகமாகியிருக்கிறார்.. தன்னை போலீஸ் டிஎஸ்பி என்று சொல்லி கொண்ட கலைவாணன், சுந்தராம்பாளின் மகன் சண்முகராஜூவுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய சுந்தராம்பாள் பல்வேறு தவணைகளாக ரூ.2 கோடி வரை கலைவாணனுக்கு வழங்கியுள்ளார். ஆனால், வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. சிறுக சிறுக இந்த 2 கோடி ரூபாய் பணத்தை தந்தாராம் சுந்தரம்பாள்..
அதிரடி கைது: இதனால் அதிருப்திக்குள்ளான சுந்தராம்பாள், கலைவாணனிடம் கேட்டபோது, மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பெருந்துறை போலீசில் கடந்த, 9ம்தேதி கலைவாணன் மீது சுந்தராம்பாள் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக இருந்த கலைவாணனை கைது செய்து, விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications